சென்னை கொரட்டூரில் அதிகாலையில் சோகம்.. பிரிட்ஜ் வெடித்து பெண் உயிரிழப்பு

  • சென்னை: சென்னை கொரட்டூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு முழுக்க தீப்பற்றி எரிந்ததில் துங்கிக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகன் மற்றும் கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    Advertisement

    சென்னை கொரட்டூர் விவேகாணந்தா பள்ளி அருகே உள்ள கணேஷ் பிருந்தாவனம் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வருபவர் ரமணி. இவரது மனைவி அகிலா. இந்த தம்பதிக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். குடும்பத்தினர் 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். மாற்றுத்திறனாளியான அகிலாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது..

    Advertisement

    இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினர் 3 பேரும் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கினர். அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பிரிட்ஜ் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரிட்ஜ் ஏற்கனவே பழுதாகி இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த போது திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீடு முழுக்க தீ பற்றி எரிந்துள்ளது.

    அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ரமணி திடீரென வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே மகன் கார்த்திகை எழுப்பி இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். லேசான தீக்காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர். எனினும் மாற்றுத்திறனாளியான அகிலாவால் உடனடியாக வெளியேற முடியவில்லை. தீயில் சிக்கிக்கொண்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    Advertisement
    சென்னை துரைப்பாக்கத்தில் சிக்கிய சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு துறை! நடந்தது என்ன?

    இதற்கிடையே தீ விபத்து பற்றி அறிந்ததும் கொரட்டூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அகிலாவை மீட்டனர். மேலு வீட்டில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். கொரட்டூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லேசான காயங்களுடன் இருந்த ரமணி, கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அகிலாவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    In Korattur, Chennai, a fire broke out after a refrigerator exploded while the residents were asleep. The entire house caught fire, tragically resulting in the death of a woman with a disability who was asleep inside. Her son and husband managed to escape with minor injuries.