TRAI: டவர் இல்லாமலயே விரைவில் இயங்க போகும் ஸ்மார்ட்போன்கள்.. டிராய் வைத்து இருக்கும் மெகா பிளான்!

  • மும்பை: செல்போன் சிக்னல்கள் இல்லாத பகுதிகளிலும் கூட எந்த இடையூறும், தடங்கலும் இல்லாமல் அழைப்புகளையும், இணயவசதியையும் பெறக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில், சேட்டிலைட் அடிப்படையிலான சேவையை வழங்குவதற்கான புதிய கட்டமைப்பை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை பார்க்கலாம்.

    Advertisement

    செல்போன்களுக்கு சரியாக டவர் கிடைக்க மாட்டைக்கிறதே.. என்று புலம்பும் காலமெல்லாம் விரைவில் மாயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், செல்போன்கள் இணைய இணைப்புகளுக்கும், அழைப்புகள் மேற்கொள்வதற்கும் டவர்களை நம்பியிருப்பதற்கு பதிலாக நேரடியாக செயற்கை கோள் மூலமாக இணைப்பு பெறும் தொழில் நுட்பம் வரும் ஆண்டுகளில் செயல்படுத்தட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    செயற்கைக்கோள் கனெக்டிவிட்டி

    இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் இது தொடர்பாக புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதாவது, நாட்டில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்காக புதிய கட்டமைப்பை உருவாக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைகளில்,நேரடியாக டிவைஸ்களுடன் இணைக்கும் D2D செயற்கைக்கோள் இணைப்பு வசதிக்கும் அனுமதி அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஆதார் எண்ணை வெளியிட கூடாது.. சட்ட நடவடிக்கை பாயும்.. டிராய் இயக்குனருக்கு ஆதார் அமைப்பு குட்டு!

    இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், செயற்கைகோள் மூலமாக அழைப்பு மேற்கொள்ளும் வசதியை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மூலம் நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு சேவைகளை பெற முடியும்.

    Advertisement

    மொபைல் சேட்டிலைட் சர்வீசஸ்

    இந்தியாவில் தற்போது பெரும்பாலான போன்கள், அருகில் உள்ள மொபைல் டவர்களையே சார்ந்து இயங்குகிறது. ஆனால் செயற்கைக்கோள் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை நேரடியாக சேட்டிலைட் இணைப்பை பெற்று இயங்கும் என்பதால் மொபைல் நெட்வொர்க் கவரேஜ் ஒரே சீராகவும் எளிதாகவும் கிடைக்கும். இதன்மூலம், எதிர்காலத்தில் இந்த வசதியை கொண்டு இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மொபைல் டவர்களை மட்டும் நம்பியிருக்காமல் சேட்டிலைட் இணைப்பை பெறும்.

    ஐயுசி கட்டண விவகாரத்தில் திடீர் திருப்பம்.. ஜியோவுக்கு பிராட்பேண்ட் இந்தியா மன்றம் ஆதரவு

    டிராய் அளித்த பரிந்துரைகளில் இரண்டு வகையான டைரக்ட் டிவைஸ் சேவைகளை அனுமதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மொபைல் சேட்டிலைட் சர்வீசஸ் என்பது, எல்-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் உள்ளிட்ட குறிப்பிட்ட செயற்கைக்கோள் அலைவரிசைகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் நேரடியாக சேட்டிலைட்கள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

    Advertisement

    உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது

    எதிர்காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில், இந்தச் செயற்கைக்கோள் அலைவரிசைகளுக்கு ஏற்ற ஹார்டுவேர்களை இடம் பெற செய்ய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஏனெனில், தற்போது பயன்பாட்டில் உள்ள செல்போன்களில் செயற்கைக்கோள் இணைப்பை பெறுவதற்கான சப்போர்ட் ஆப்ஷன்கள் இல்லை. இன்னொன்று ஐஎம்டி என்ற டி2டி இணைப்பு ஆகும். இது குறிப்பிட்ட அலைக்கற்றைகளை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும்.

    இப்போது வெறும் பரிந்துரைகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே, ஸ்மார்ட் போன்களில் உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது. செயற்கைக் கோள் இணைப்பு பெறுவது என்பது மத்திய அரசின் கொள்கைகளை பொறுத்து மாறுபடும். உள்கட்டமைப்புகள், சேட்டிலைட் நெட்வொர்க் வழங்குபவர்களுக்கும் தொலைத் தொடர்பு துறை ஒப்பந்தங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுதலுக்கு உட்படும். ஆரம்ப கட்ட படிநிலைதான் இந்த பரிந்துரை என்பதால், டவர் இல்லாத காலம் வருவற்கு இன்னும் சில வருடங்கள் எடுக்கும் என்றே தெரிகிறது.

    English Summary

    TRAI: The time when one can access calls and internet services without any interruption or hindrance—even in areas lacking mobile network coverage—may not be far off. This is because the Telecom Regulatory Authority of India (TRAI) has proposed a new framework for providing satellite-based services. Let us look at the complete details regarding this.