ரயிலின் ஏசி கோச்சில் கற்பூரம் கொளுத்திய நபர்.. மாந்திரீகமா? பதறிப் போன பயணிகள்!

  • சென்னை: ஓடும் ரயிலின் ஏசி பெட்டியில் பயணி ஒருவர் கற்பூரம் கொளுத்தி, அகர்பத்திகளை ஏற்றி பூஜை செய்த சம்பவம் ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிற பயணிகளின் உயிரை துளியும் மதிக்காமல் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்ட அந்த பயணியை சக பயணிகள் வசைபாடியுள்ளனர். அந்த பயணி மீது ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    ரயில்களுக்குள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்ற விதி உள்ளது. ரயிலுக்குள் வைத்து பயணிகள் புகை பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் மறைத்து தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து சென்றால் கூட சோதனயின்போது பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

    Advertisement

    ஏசி கோச்சில் கற்பூரம் கொளுத்திய பயணி

    நூற்றுக்கணக்கான பயணிகள் செல்லக்கூடிய ரயிலில் சிறிய அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ரயில்வே நிர்வாகம் இத்தகைய கெடுபிடிகளை விதித்துள்ளது. ஆனால், சில பயணிகளோ இந்த விதிகளெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ரயில்களில் பிற பயணிகளின் உயிரை துளியும் மதிக்காமல் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அப்படி என்னதான் செய்தார் என்று கேட்கிறீர்களா.. ரயிலின் ஏசி கோச்சில் பயணித்த பயணி ஒருவர், தனது படுக்கையில் வைத்து, கற்பூரம் கொளுத்தி, அகர்பத்திகளை ஏற்றி பூஜை செய்தார். இவரது இந்த செயலால் ஏசி கோச் முழுக்க புகை மண்டலம் ஆகியுள்ளது. இதனால் சில பயணிகள் மூச்சுவிட முடியாமல் திண்டாடிப்போகினர். சக பயணிகள் பலரும் சென்று உடனடியாக அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    பெரும் ஆபத்தை விளைவிக்கும்

    மொத்த ரயிலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கிறது என்று பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரயில்வேக்கு பயணிகள் பலரும் டேக் செய்தனர். ஏசி பெட்டிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏசி கோச்சில் பயணிகளின் படுக்கை மற்றும் படுக்கை விரிப்புகள் சிந்தட்டிக் பெட் ஷீட்கள் ஆகியவை இருப்பதால் எளிதில் தீப்பற்றும் இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று பதிவிட்டு வந்தனர்.

    எந்த ரயிலில் இந்த நிகழ்வு நடைபெற்றது?. எப்போது, நடைபெற்றது? என்ற விவரம் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ அடிப்படையில் ரயில்வேயும் விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான வாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    வாழ்நாளில் மறக்க முடியா தண்டனை கொடுக்கனும்

    நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "பூஜை செய்வது என்பது தனிநபர் விருப்பம் என்றாலும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ரயிலுக்குள் ஏதேனும் மாந்திரீகம் எதுவும் செய்கிறாரா? என கேட்டுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், ரயிலில் சிறிய தீப்பெட்டி வைத்து இருப்பது கூட அனுமதி கிடையாது. ஆனால், ரயிலுக்குள் தீயை வைத்து பூஜை செய்யும் இவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு ரயில்வே தண்டனை கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ள்ளார்.

    English Summary

    Train AC Coach: Passengers were shocked when a traveler performed a puja lighting camphor and incense sticks inside the AC coach of a moving train. Fellow passengers rebuked the individual for engaging in such a dangerous act without the slightest regard for the lives of others. They have also demanded that railway authorities take action against the passenger.