சென்னை: தமிழ்நாட்டின் இரண்டு முக்கியமான ரயில் பாதைகளில் முதன்மையானது எழும்பூர்-திருச்சி ரயில் பாதை தான். இந்த பாதை வழியாகவே தமிழ்நாட்டின் தெனமாவட்ட ரயில்கள் செல்கின்றன இங்கு பல்வேறு சவால்கள் இருந்தாலும் சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான 336.57 கி.மீ. இரட்டை ரயில் பாதையை மேம்படுத்தும் பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. தற்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில், பணிகள் முடிந்ததும் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தஞ்சை, கடலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல எழும்பூர், திருச்சி பாதை தான் முதன்மையானது. இந்த பாதையில் ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்குவதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. வரும் 2027 இறுதிக்குள் ரயில்களை 130 கிமீ வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த பணிகள் முடிந்தால் வழக்கமான ரயில்களின் பயண நேரத்தில் குறைந்தது 20 நிமிடங்களும், வந்தே பாரத் உள்ளிட் அதிவேக ரயில்களின் பயண நேரத்தில் 30 நிமிடங்கள் வரையிலும் குறைய வாய்ப்புள்ளது.
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தண்டவாளங்கள் பிரியும் அல்லது இணையும் இடங்களில் ரயில்கள் அதிக வேகத்தில் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வளைவுகளில் ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் சாய்வு தொடர்பான குறைபாடுகளும் சரி செய்யப்படுகிறது. தண்டவாளச் சந்திப்புகளில் ரயில்கள் வேகமாகச் செல்ல வசதியாக, வழக்கமான ஸ்விட்சுகளுக்குப் பதிலாகத் தடிமனான வெப் கொண்ட ஸ்விட்சுகளைப் பொருத்தப்படுகிறது. தண்டவாளங்களில் கால்நடைகள் நுழைவதையும், அத்துமீறி மக்கள் கடப்பதையும் தடுக்கும் வகையில் வேலிகள் அமைக்கப்படுகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்னலிங் அமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. ரயில்வே லெவல் கிராசிங்குகளுக்குப் பதிலாக சாலை மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த 52 கிலோ எடை கொண்ட தண்டவாளங்களுக்குப் பதிலாக, 60 கிலோ எடை கொண்ட தண்டவாளங்கள் முழுமையாக மாற்றப்படுகிறது. தற்போதைய நிலையில் ரயில்களின் பாதையை மேம்படுத்தும் பணி என்பது சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான 336.57 கி.மீ. பாதை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர்-விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் வரையிலான 162 கி.மீ. பாதையில் சுமார் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்தப் பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மீதமுள்ள விழுப்புரம்-திருச்சி இடையிலான 174.57 கி.மீ. பாதையில் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செங்கல்பட்டு-விழுப்புரம் இடையிலான ரயில் பாதையில், மண் இறுக்கமின்றி தளர்வாக உள்ள பகுதிகள் அதிகம். எனவே இங்கு ரயில் பாதையின் மேடுகளை வலுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது. குறிப்பாக கருங்குழி, ஒத்திவாக்கம், ஒலக்கூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 8 கி.மீ. நீளத்துக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டடிருக்கிறது. மழைக்காலங்களில் மண் அரித்துச் செல்லப்படுவதால், இந்தப் பகுதிகளில் ரயில் பாதையின் மேடுகளை வலுப்படுத்தும் பணிகள் கடினமாக இருந்துள்ளது. பல்வேறு சவால்களை கடந்து இந்த இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-விழுப்புரம் ரயில் பாதையில் மொத்தம் 195 தண்டவாளச் சந்திப்புகள் உள்ளன. இங்கு ரயில்கள் அதிக வேகத்தில் செல்லும் வகையில் வழக்கமான ஸ்விட்சுகளுக்குப் பதிலாகத் தடிமனான வெப் கொண்ட ஸ்விட்சுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்போது செங்கல்பட்டு-விழுப்புரம் இடையிலான பெரும்பாலான பொறியியல் பணிகள் முடிவடைந்துவிட்டது. செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையிலான பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன. இதுவரை 154 இடங்களில் புதிய வகை ஸ்விட்சுகளை அதிகாரிகள் பொறுத்தியுள்ளனர். இதன் மூலம் தண்டவாளச் சந்திப்புகளைக் கடக்கும்போது ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை-விழுப்புரம் இடையிலான 162 கி.மீ. ரயில் பாதையில் ஏற்கெனவே சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 112 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இதுவே மிகவும் முக்கியமானது ஆகும். சென்னை-விழுப்புரம் ரயில் பாதையில் மொத்தம் 41 லெவல் கிராசிங் கேட்கள் உள்ளன. இவற்றில் மூன்று லெவல் கிராசிங்குகள், சாலை மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கிடைத்த பிறகு மூடப்பட இருக்கிறது. மீதமுள்ள இடங்களில் ரயில்வே விதிமுறைகளுக்கு ஏற்ப சாலை மேம்பாலங்கள் அல்லது குறைந்த பயன்பாட்டுக்கான சுரங்கப் பாதைகள் போன்ற கட்டமைப்புகள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் பாதையில் ஏற்கெனவே ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்னலிங் அமைப்பு செயல்பாட்டில் இருப்பதால், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக அனைத்து லெவல் கிராசிங் கேட்களையும் மூட வேண்டிய அவசியம் இல்லை. மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததும், மணிக்கு 143 கி.மீ. வேகம் வரையிலான சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். அதன் பின்னர், ரயில்களின் அனுமதிக்கப்பட்ட வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக உயர்த்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரும். தேவையான பாதுகாப்பு அனுமதி கிடைத்த பிறகே புதிய வேக வரம்பு நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.என்னென்ன பணிகள் நடைபெறுகிறது
பட்டினப்பாக்கம் கைவிடப்படுகிறதா? தலைமைச் செயலகம், சட்டசபைக்கு பல்லவன் இல்லத்தைப் பரிசீலிக்கும் விஜய்
சென்னை-விழுப்புரம் பாதையில் 80% பணிகள் நிறைவு
திருமயிலை ரயில் நிலையத்தில் இருட்டுப் பள்ளம்.. தெரியாத ஆபத்து.. விஜயாவின் மரணம் எழுப்பும் கேள்விகள்
செங்கல்பட்டு-விழுப்புரம் பாதையில் சவால்கள்
195 தண்டவாளச் சந்திப்புகளில் மேம்பாட்டுப் பணிகள்
112 கி.மீ. தூரத்துக்கு வேலி அமைக்க வேண்டும்41 லெவல் கிராசிங்குகள்: என்ன திட்டம்?
143 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்