சென்னை: சென்னையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். க்குவரத்து துறையில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் அமர்த்தக் கூடாது எனவும், சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளை தனியார் மயமாக்கும் தமிழக வெற்றி கழக அரசுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் வெடித்துள்ளது. ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தற்போது போக்குவரத்து தொழிலாளர்களும் களத்தில் இறங்கியுள்ளது தவெக அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அலுவலகம் வெளியே சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் இந்த தொடர் முழக்கப் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனைகளை தனியார் மையம் ஆக்க கூடாது, காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்ட வேண்டும், தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் தமிழ்நாடு அரசே மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராகவும் போக்குவரத்து துறையில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் அமர்த்தக் கூடாது என போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்கப் போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தயானந்தன்," தமிழ்நாடு அரசு தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்கக் கூடாது, தனியார் மையம் மூலம் இட ஒதுக்கீட்டை சரியாக பின்பற்ற முடியாது சூழல் உள்ளதாகவும், சென்னையில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் மூடப்பட்டு தனியார் மையம் ஆக்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர் தமிழக வெற்றிக்கழக அரசு 7 போக்குவரத்து பணிமனைகளை தனியார் மையமாக உள்ளதாகவும் முதற்கட்டமாக இரண்டு போக்குவரத்து பணிமனைகளை தனியார் மையம் ஆக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்திய அவர் போக்குவரத்து துறையில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் அமர்த்தக் கூடாது என கூறினார். ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை குண்டுகட்டாக காவல்துறை கைது செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே தனியார் மயம், வடமாநில தொழிலாளர்கள் என்று கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளது தமிழக அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.