பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்திற்காக கடுமையாக உழைத்தோம்.. வேறு எந்த இடமும் செட் ஆகாது.. டிஆர்பி ராஜா ஆதங்கம்

  • சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த கடுமையாக உழைத்துள்ளோம். பல வல்லுநர்கள் ஆராய்ந்து உருவாக்கியது தான் பரந்தூர் விமான நிலைய திட்டம். சென்னையில் இனி வேறு எந்த இடமும் செட் ஆகாது என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    5-வது இடத்துக்கு போய்விட்டது

    முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பயணங்கள் எல்லாம் செல்லும் போது, ரொம்ப உன்னிப்பாக கவனிக்கப்பட்டது என்னவென்றால் உங்க விமான நிலையம் கனெக்டிவிட்டி எப்படி வரப்போகுது என்று தான். ஏனென்றால் இந்தியாவிலேயே 3வது பெஸ்ட் விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருந்தது. இப்போது 5வது இடத்திற்கு போய்விட்டது. ஹைதராபாத், பெங்களூரில் இருப்பவர்கள் கூட சென்னை வந்து தான் அங்கு செல்வார்கள். ஆனால் இப்போது நமக்கு பின்னால் இருந்த ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமான நிலையம் முன்னால் வந்துவிட்டது. தென் இந்தியாவின் கேட்வேயாக சென்னை விமான நிலையம் இருந்தது.

    Advertisement

    ஆனால் இப்போது நாம, ஹைதராபாத், பெங்களூர் போக வேண்டி உள்ளது. இதைத் தான் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். பக்கத்து மாநிலத்தவர் வந்து இங்க வந்து ஒரு ஏக்கத்தோடு கேட்கிறார். சென்னை ஏர்போர்ட் எப்படி இருக்கனும்.. இதை பார்த்து நான் ஹைதராபாத் ஏர்போர் பண்ணினோம். எங்களை பார்த்து பெங்களூர் பண்ணியது. இன்னைக்கு பெங்களூர் எவ்வளவு வளர்ந்துள்ளது.

    ஒரே ஒருமுறை தான் போனீங்க..

    ஆனால் சென்னை ஏன் இன்னும் இப்படியே இருக்குது.. இந்த அளவுக்கு அண்டை மாநிலத்தின் முதல்வருக்கு இருக்கும் அக்கறை கூட இன்று இருப்பவர்களுக்கு இல்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு வார்த்தை சொல்லிவிட்டோம் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே, நான் அங்கு போயிருந்தே.. மக்களை சந்தித்து இருந்தேன்.. உறுதியளித்துவிட்டேன். வந்துவிட்டேன் என சொல்றாங்க..

    Advertisement

    நீங்க ஒரு வாட்டி போனீங்க.. பேசுனீங்க.. அதை வைத்து எப்படி முடிவு பண்ணுணீங்க.. ஆனால் தங்கம் தென்னரசு, எவ வேலு, தாமோ அன்பரசன் நிறைய முறை அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தேவையான வீடு ஒதுக்கி கொடுத்து, திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்து எல்லா பிளானையும் செய்து முடிச்சாச்சு.. இவ்வளவு கஷ்டப்பட்டு திட்டமிடல் செய்தோம்.

    வேறு இடம் செட் ஆகாது

    ஏனென்றால் பல இடங்களை நாம பார்த்தாச்சு.. சென்னையை சுற்றி நீங்க கூகுள் மேப்பில் கூட பாக்கலாம். வேறு எந்த இடமும் செட் ஆகாது. நீர் நிலை இல்லாம ஒரு இடத்தை இனிமே எடுக்க முடியுமா.. நீங்க இனிமேல் இதற்காக புதுசா தேர்வு செய்கின்ற இடமும் எந்த ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லாமல் இருந்துவிடுமா.. இவ்வளவு இதையும் பார்க்காமல் தான் நாட்டிலேயே நம்பர் ஒன் முதல்வராக உள்ள மு.க ஸ்டாலின் அரசு இந்த திட்டத்தினை செய்தாரா என்று பார்க்க வேண்டும். என்று கூறினார்.

    English Summary

    TRB Rajaa: We have worked hard to implement the Parandur airport project. The Parandur airport plan was formulated after thorough analysis by numerous experts. Former Industries Minister TRB Rajaa has stated that no other location in Chennai is suitable for the project.