டிஆர்பி ராஜா எச்சரிக்கை: கிளாட் ஃபேபிள் 5 பிரச்சனை.. தமிழ்நாடு முன்கூட்டியே தயாரானது!

  • அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக கிளாட் ஃபேபிள் 5 போன்ற மேம்பட்ட ஏஐ மாடல்களை வெளிநாட்டவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இது இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையை மனதில் வைத்து, தமிழ்நாடு முன்கூட்டியே தயாரிப்புகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஸ்டாலின் ஆட்சியில் தொடங்கிய முயற்சி

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிலேயே முதன்முதலாக முழு அடுக்கு சொவ்ரின் ஏஐ பார்க் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்கியது.

    Advertisement

    இதற்காக சர்வம் ஏஐ நிறுவனத்துடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டம், வெளிநாட்டு தொழில்நுட்பங்களை நம்பியிருக்காமல், சொந்தமாக உள்நாட்டிலேயே ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

    இந்தியாவின் முதல் சொவ்ரின் ஏஐ பார்க்

    ஜனவரி 2026 முதல் தமிழ்நாட்டில் இந்தியாவின் முதல் சொவ்ரின் ஏஐ பார்க் அமைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான முக்கிய ஒப்பந்தம், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சர்வம் ஏஐ நிறுவனத்துடன் கையெழுத்தானது.

    இந்த திட்டத்தின் மூலம் ஆரம்ப கட்டமாக 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மேலும், 1,000 உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

    இந்த சொவ்ரின் ஏஐ பார்க், ஏஐ கணினி உள்கட்டமைப்பு, பாதுகாப்பான தரவு அமைப்புகள், மேம்பட்ட ஆராய்ச்சி ஆய்வகங்கள், புதுமை மையங்கள் மற்றும் ஆளுமைக்கான ஏஐ நிறுவனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அமைக்கப்படும்.

    தரவு, மாடல்கள் மற்றும் கணினி வசதிகள் அனைத்தும் மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும். இதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை இறையாண்மை, நெறிமுறை மற்றும் உள்ளடக்கத்துடன் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கை

    டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற முன்னணி மாநிலங்களும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இதில் தாமதம் ஏற்பட்டால் அது மன்னிக்க முடியாத தவறாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம், வெளிநாட்டு ஏஐ தொழில்நுட்பங்களை நம்பாமல், இந்தியாவே சொந்தமாக உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Former Minister TRB Rajaa has warned that US restrictions on advanced AI models like Claude Fable 5 serve as a wake-up call for India and Tamil Nadu. Under MK Stalin’s government, Tamil Nadu had already initiated the country’s first Sovereign AI Park with Sarvam AI, involving ₹10,000 crore investment and 1,000 high-skilled jobs to reduce dependence on foreign AI technology.