Trichy East: முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்? பின்னணி

  • சென்னை: முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தலை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் அமைய உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அந்த தொகுதி அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    எனினும் தேர்தல் வழக்கு நிலுவை காரணமாக இந்த தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது. தடை காரணமாக சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தேர்தல் அறிவிப்போடு திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

    Advertisement
    எஸ்ஐஆர் சர்ச்சைக்கு நடுவே.. தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் SSR பணிகள்! தேர்தல் ஆணையம் உத்தரவு

    இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், திருச்சி கிழக்கு தொகுதியில் அமைய உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

    விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு

    சிசிடிவி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுகளை செய்த பிறகு பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது அதிகாரிகளும் உடன் இருந்தனர். வாக்குச்சாவடிகளுக்கான தடையற்ற மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்டவை முறையாக உள்ளதா? என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement
    Sekar Babu: நீங்க பேசுறது போர் அடிக்குது.. தவெக எம்எல்ஏ விஜய் தாமு அடித்த கமெண்ட்! கடும் டென்ஷனான சேகர் பாபு

    இதனால் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதா? என்ற பரபரப்பு திருச்சி கிழக்கு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

    English Summary

    Trichy East: It is reported that the Election Commission will soon conduct a by-election for the Tiruchirappalli East constituency, following the resignation of its representative, Vijay. The District Collector personally inspected the locations designated as polling stations in the constituency. Given that the Collector reviewed the availability of essential amenities for voters at these sites, it is expected that an official election announcement may be issued soon.