திருச்சி சூர்யா - யூடியூபர் முக்தார் குண்டர் சட்டத்தில் கைது.. இனி ஓராண்டு ஜாமீன் கிடைக்காது.. அதிரடி உத்தரவு

  • சென்னை: பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த புகாரில் கைது செய்யப்பட்ட திருச்சி சூர்யா - யூடியூபர் முக்தார் ஆகியோர் மீது இன்று குண்டர் சட்டம் அதிரடியாக பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்தள்ளார். குண்டர் சட்டத்தில் கைதானதால் இருவருக்கும் என்ன பிரச்சனை? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. திருச்சி சூர்யா பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கட்சியில் இருந்து விலகினார். தற்போது எந்த கட்சியிலும் அவர் இல்லை. யூடியூப் சேனல்களுக்கு திருச்சி சூர்யா தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார்.

    Advertisement

    அந்த வகையில் சமீபத்தில் திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தாருக்கு பேட்டியளித்து இருந்தார். அப்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பல பாஜக நிர்வாகிகள் பற்றி இருவரும் கூறிய கருத்துகள் முகம் சுளிக்க வைத்தன.

    குறிப்பாக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருக்கும் அலிஷா அப்துல்லாவின் இரட்டை குழந்தைகளை பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையுடன் தொடர்புப்படுத்தி பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக அலிஷா அப்துல்லா சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து புகாரளித்தார். திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தாரை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தேடி திருச்சி சென்று, திருச்சி சூர்யாவை கைது செய்தனர். அதேவேளையில் யூடியூபர் முக்தார் தலைமறைவானார். அவர் கர்நாடகாவில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருச்சி சூர்யாவை ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். தற்போது இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தான் இவர்கள் 2 பேர் மீதும் இன்று அதிரடியாக குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
    திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் ஆகியோர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இவுர்களின் பல பேட்டிகள் விவாதத்தை கிளப்பி உள்ளன. அந்த வகையில் பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்த கருத்தால் இருவரும் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் இருவரும் இனி ஓராண்டு வரை ஜாமீனில் வெளியே வர முடியாது. சிறையிலேயே தான் இருக்க வேண்டும். சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் அவர்கள் நீதிமன்றத்தை நாடி குண்டர் சட்டத்தை முதலில் உடைக்க வேண்டும். அதன்பிறகு தான் அவர்களால் ஜாமீனில் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Goondas Act has been invoked against Trichy Surya and YouTuber Mukthar, who were arrested following allegations of making controversial remarks about BJP functionary Alisha Abdullah. Chennai City Police Commissioner Amalraj issued the order. With the invocation of the Goondas Act, neither individual can be released on bail for a year; they must remain in prison.