த்ரிஷாவுக்கு வணக்கம் வைத்த புஸ்ஸி ஆனந்த்.. சுதந்திர தின விழாவில் அரங்கேறிய சம்பவம்! அடுத்தது அதுதான்

  • சென்னை: சுதந்திர தின விழாவின் போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய்யின் தோழியான நடிகை த்ரிஷா மற்றும் அவரின் தாய் உமா கிருஷ்ணன் ஆகியோருக்கு வணக்கம் வைத்து சென்றுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தவெகவினர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    நாட்டின் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வரான பின் விஜய் சுதந்திர தினத்தன்று முதல்முறையாக தேசிய கொடி ஏற்றுவதை பார்க்க அவரின் பெற்றோர், தோழி த்ரிஷா மற்றும் அவரின் தாய் உமா கிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.

    Advertisement

    சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா குடும்பத்துடன் பங்கேற்றது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதமாகியது. இந்த நிகழ்ச்சி நிறைவடைந்து விஜய் புறப்பட்ட போதும் கூட த்ரிஷாவுக்கு சல்யூட் வைத்து டாட்டா காட்டி சென்றார். நடிகை த்ரிஷாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தேசிய அளவில் டிரெண்டாகியது.

    ஆனால் நடிகை த்ரிஷாவுக்கு எதிராக தவெக தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர். அண்மையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கை மனைவி சங்கீதா திரும்பப் பெற்று கொண்டார். இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திலேயே நடிகை த்ரிஷா சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

    Advertisement

    இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக காலை 7 மணியளவிலேயே த்ரிஷா வந்துவிட்டார். அவருக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்பின் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். எந்த அமைச்சரும் த்ரிஷாவை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மட்டும் த்ரிஷாவுக்கும், அவரின் தாய் உமா கிருஷ்ணனுக்கும் வணக்கம் வைத்து செல்கிறார்.

    இதன் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புஸ்ஸி ஆனந்தை அடையாளம் தெரியாமல் த்ரிஷா யாரென்று கேட்பதும், அதற்கு அவரின் அம்மா உமா கிருஷ்ணன், அவர் புஸ்ஸி ஆனந்த் என்று பதில் அளிப்பதும் வாய் அசைவில் தெரிகிறது. இதனால் விரைவில் த்ரிஷா தவெகவில் இணையக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Trisha: TVK Minister Bussy Anand Greets Actress Trisha and Her Mother at Independence Day Event