திரிஷா காவி, எஸ்ஏசி வெள்ளை, ஷோபா பச்சை.. இந்திய ஒருமைப்பாடு என வீடியோ போட்ட நெட்டிசன்

  • சென்னை: தமிழ்நாட்டில் முதல்வராக முதல்முறையாக விஜய் தேசியக் கொடியேற்றிய சுதந்திர தின விழாவில், திரிஷா அணிந்த உடை காவி நிறத்திலும், சந்திரசேகர் அணிந்த உடை வெள்ளை நிறத்திலும், ஷோபா அணிந்த உடை பச்சை நிறத்திலும் இருந்ததைச் சுட்டிக்காட்டி, தேசியக் கொடி படத்துடன் நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    Advertisement

    நமது நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தின விழா தமிழ்நாட்டில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், முதல்முறையாகச் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் களம் இறங்கிய முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராகியுள்ளார். இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக இல்லாத ஆட்சி, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சாத்தியமாகியுள்ளது.

    முதல்வர் விஜய் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் முதல்வராகத் தேசியக் கொடியைச் சென்னை கோட்டையில் ஏற்றுவதைக் காண, அவரது ரசிகர்களும் தவெக நிர்வாகிகளும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இந்த விழாவில் முதல்வர் விஜயுடன் அவரது அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். இந்த விழாவில் விஜயின் தோழியான நடிகை திரிஷாவும் அவரது அம்மாவுடன் பங்கேற்றார். திரிஷாவும் விஜயின் அப்பா சந்திரசேகரும் அருகருகே அமர்ந்திருந்தனர். திரிஷா, சந்திரசேகர், ஷோபா ஆகிய மூவரின் உடைகளை வைத்து நெட்டிசன்கள் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர்.

    Advertisement

    திரிஷா காவி நிறத்திலும், சந்திரசேகர் வெள்ளை நிறத்திலும், ஷோபா பச்சை நிறத்திலும் உடை அணிந்திருந்ததைக் குறிப்பிட்டு, "தேசியக் கொடி" மற்றும் "தேசிய ஒருமைப்பாடு" என்று கூறி நெட்டிசன்கள் 'வந்தே மாதரம்' பாடலைப் பின்னணியில் சேர்த்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    விஜயின் தோழி திரிஷா பங்கேற்றது குறித்துப் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இந்த வீடியோ தனிக் கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருவதுடன், தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

    Topics: #vijay #trisha

    English Summary

    Trisha Wears Saffron, SAC Wears White, Shoba Wears Green: Netizens Post Video Highlighting Indian Integration