விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்.. ரெய்டுக்கு ரெடியான டெல்லி! கதர் தான் காரணமாம்!

  • சென்னை: முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணையும் நிகழ்வு அமோகமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்படி இருக்கையில், விரைவில் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    தவெக போதுமான பெரும்பான்மை பெறாத நிலையில் ஓடி வந்து முதல் ஆளாய் ஆதரவு கொடுத்தது காங்கிரஸ்தான். இந்த உதவிக்கு கைமாறாகத்தான் 2 அமைச்சர் பதவி, ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை தவெக தூக்கி கொடுத்தது.

    Advertisement

    கதர்தான் பிரச்சனை

    பிரச்சனை என்னவெனில், பாஜக சொல்லியும் காங்கிரஸ் தவெக கழற்றிவிட மறுக்கிறது என்பதுதான். சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் உடனான பழக்க வழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும் விஜய் இந்த விஷயத்தை ஒரு காதில் வாங்கி மறு காதில் வெளியே விட்டுவிட்டார்.

    காங்கிரஸுக்கு அங்கீகாரம்

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், காங்கிரஸுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க விஜய் முடிவெடுத்திருக்கிறார். இதுதான் தற்போது பாஜகவை உசுப்பி இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால், தற்போது புதியதாக கட்சியில் இணைந்திருக்கும் சி.விஜயபாஸ்கர் மூலம் செக் வைக்கலாம் என்று மத்திய அரசு ஸ்கெட்ச் போட்டு வருகிறதாக சொல்லப்படுகிறது.

    குட்கா வழக்கு

    சி.விஜயபாஸ்கர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. குறிப்பாக குட்கா நிறுவனத்திடமிருந்து மாதம் ரூ.14 லட்சம் வாங்கினார் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது. இப்படியான பழைய புகார்களை எல்லாம் தோண்டி எடுத்தால் நிச்சயம் சி.விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டிவிடலாம். அதை வைத்து விஜய்யை வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்று டெல்லி கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது.

    கட்சி வளர்ச்சி

    இப்போதுதான் தவெக, கட்சியை பலப்படுத்தும் பணியை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் அரசியல் தெளிவு கொண்டவர்களை நியமிக்க கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இப்படி இருக்கையில், மொத்த ஆட்டத்தையும் கலைத்து போடும் விதமாக டெல்லி மூவ் செய்ய இருப்பது தவெகவை கலக்கமடைய செய்திருக்கிறது.

    Advertisement

    சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் இணைப்புக்கு தவெக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எனவேதான் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் விஜய் நேரடியாக பங்கேற்கவில்லை. இருந்தாலும் கட்சியை வளர்க்க இந்த இணைப்பு அவசியம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அந்த வகையில் டெல்லியின் நடவடிக்கையை எப்படி அவர் சமாளிக்கப்போகிறார் என்பது கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது.

    English Summary

    Trouble Awaits Vijay: The event marking the induction of former ministers C. Vijayabaskar and M.R. Vijayabaskar into TVK has concluded successfully. Amidst this, it is being said that it would come as no surprise if the Enforcement Directorate conducts a raid against C. Vijayabaskar in the near future.