“தமிழ்நாட்டில் இன்று நடப்பது நரகாசுரன் ஆட்சி.. அதை ஒழிக்கும் நாளே தீபாவளி - திமுக சேகர்பாபு பேச்சு!

  • சென்னை: "தமிழ்நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கிற ஆட்சி நரகாசுரன் ஆட்சி. தமிழகத்தின் நரகாசுரனை ஒழிக்கின்ற நாள் தான் நமக்கு உண்மையான தீபாவளி" என திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "இன்றைக்கு கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சி எதற்காக என்று கூட கேள்வி எழுப்பப்படும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இதற்கு உடன்பாடு இல்லை என்ற கருத்துகள் கூட பகிர்ந்துகொள்ளப்படும்.

    Advertisement

    தமிழ்நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கிற ஆட்சி நரகாசுரன் ஆட்சி. தேவர்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருப்பவன் நரகாசுரன். இன்றைக்கு தேவர்களாக இருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள். நரகாசுரன் ஒரு வரத்தைப் பெறுகிறான். அவனுடைய தாயார் மூலம் தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறான்.

    தேவர்கள் அனைவரும் அகிலத்தை ஆள்கிற கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிடுகிறார்கள். நரகாசுரன் செய்யும் தொல்லைகள் தாளாமல் முறையிடுகிறார்கள். நரகாசுரனை வதம் செய்யும்போது அவனுடைய வேண்டுகோளை கிருஷ்ண பரமாத்மா கேட்கிறார். தான் இறக்கும் நாளை தீபாவளியாக கொண்டாட வேண்டும் எனக் கேட்கிறான் நரகாசுரன். தமிழகத்தின் நரகாசுரனை ஒழிக்கின்ற நாள் தான் நமக்கு உண்மையான தீபாவளி." எனப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு.

    Advertisement

    பகுத்தறிவு பேசும் திமுக, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. நரகாசுரன் வதம் போன்ற புராணக் கதைகளின் அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகைகளைத் திராவிட இயக்கமான திமுக ஏற்பதில்லை. திமுக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஏன் என எழும் விமர்சனங்களுக்கு ஆ. ராசா உள்ளிட்ட திமுக தலைவர்கள் கட்சியின் கொள்கை விளக்கங்களை அவ்வப்போது தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சேகர்பாபு, நரகாசுரனை ஒழிக்கும் நாளே நமக்கு தீபாவளி எனப் பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    "The regime currently in power in Tamil Nadu is the rule of Narakasura. The day we eliminate this Narakasura of Tamil Nadu will be our true Deepavali," stated former DMK minister Sekar Babu.