ரூ 5 கோடிக்கு அரசு பதவி கேட்டது யார்? ராஜ்மோகன் என்ன ஹரிசந்திரனுக்கு பக்கத்து வீடா? தினகரன் அட்டாக்

  • சென்னை: இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு ரூ 5 கோடி கொடுப்பதாக சொன்னது யார்? அமைச்சர் ராஜ்மோகன் என்ன ஹரிசந்திரனுக்கு அடுத்து வீட்டுக்காரரா? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முன்பு பொறுப்பு ஆளுநராக இருந்தார். தற்போது தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பதவியேற்றதால் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

    Advertisement

    அது போல் தீபாவளி பண்டிகை வருவதால் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தேன். தமிழகத்தில் மற்ற மாநிலங்களைவிட அரிசியின் விலை 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிட்டது.

    இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்குச் சென்றுள்ளது. இதைத் தமிழ்நாடு அரசு சரி செய்யாமல் உண்மையை வெளியில் சொல்பவர்களை மிரட்டுகிறது. இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு ரூ 5 கோடி தருவதாக சொன்னது யார் என்பதை வெளிப்படையாக அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

    ஒருநாள் பாரம்பரிய உடை, அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு.. ப்ளூ சட்டை மாறன் வைத்த கேள்வி! வந்தாச்சு விவாதம்!
    Advertisement

    அமைச்சர் ராஜ்மோகன் என்ன ஹரிசந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரரா? யார் லஞ்சம் கொடுப்பதாக சொன்னது என்பதை ஓபனா சொல்ல மாட்டீங்களா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    கடந்த 1ஆம் தேதி சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அந்த விழாவில் ராஜ்மோகன் பேசுகையில், இந்த பெருமைமிகு மேடையில் முதல்வரோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொல்ல போகிறேன். தம்பி லயோலா மணிக்கு மட்டும் தெரியும். வேறு யாரிடமும் நான் சொன்னது கிடையாது.

    Advertisement
    கத்தி படத்தில் மேப் போட்டு கைதிய பிடிச்ச விஜய்.. இப்போது மவுனமாக இருப்பது ஏன்? பரந்தாமன் கேள்வி!

    இயல், இசை , நாடக மன்றத்தின் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் பேசினார். நான் சிரித்துக் கொண்டே லயோலா மணியிடம் சொன்னேன், "தம்பி 500 கோடி கொடுத்தாலும் யாருக்கும் பொருத்தமில்லாத ஒரு பதவியை விஜய் தர மாட்டார். எனவே அந்த பதவிக்கு பொருத்தமானவர் புஷ்பவனம் குப்புசாமி அண்ணன்தான், அவருக்கு இந்த பதவியை ஒரு ரூபாய் கூட வாங்காமல் வழங்க வேண்டும் என விஜய் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி அனுப்பினேன். இவ்வாறு ராஜ்மோகன் கூறியிருந்தார்.

    Advertisement

    அந்த பதவிக்கு ரூ 5 கோடி தருவதாக யார் சொன்னது என்பதை பொதுவெளியில் ராஜ்மோகன் சொல்ல வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் ராஜ்மோகனுக்கு லஞ்சம் தர முன்வந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்க திமுக வழக்கறிஞர் பரந்தாமன் புகார் அளித்துள்ளார்.

    English Summary

    AMMK General Secretary TTV Dinakaran, asks Rajmohan who wants to give Rs 5 crore for government post? He has to reveal the name openly.