எல்லாப் பெருமையும் டிடிவிக்கே.. ஒன்றுமில்லாமல் போன அதிமுக! போய் வேலையை பாருங்க! மாணிக்கம் அட்டாக்!


  • மதுரை: டிடிவி தினகரனை பொறுத்தவரை, அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதே அக்கறையை அவர் அதிமுகவை ஒருங்கிணைப்பதில் காட்டியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி, இந்த சூழலுக்கு வந்திருக்காது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று மதுரை வருகை தந்தார் மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகும் முதன்முறையாக வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    Advertisement

    அப்போது பேசிய அவர்," என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்த மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, காங்கிரஸின் முக்கிய காலக்கட்டத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மாணிக்கம் தாகூர்

    பல தசாப்தங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்குப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு பெற்று இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையில் உள்ளனர். இத்துடன், தமிழக காங்கிரஸின் பயணம் ஓய்ந்துவிடாது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் எங்களுக்கு மிக முக்கியமானது. இந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்தோடு நாங்கள் செயல்படுவோம்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய்

    முதலமைச்சர் விஜய்யை பொறுத்தவரை, ஒவ்வொரு தமிழருக்குமான அரசியலை முன்னெடுத்து வருகிறார்
    ஒவ்வொரு தமிழருக்குமான அரசியலாக புதுமையாக எடுத்து செல்கிறார். அதனால் இந்த அரசியல் வெற்றி எங்களுடைய வெற்றியாக இருக்கும். மத்திய அரசு அனுமதி இல்லாமல் கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் ராமர் கோவில் உண்டியலிலேயே கை வைத்து விட்டனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து இதுவரை பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் நாங்கள் நிச்சயம் பேசுவோம்.

    பாஜக

    மத்திய அரசு தமிழகத்தில் பாஜக தோல்வியுறுவதன் வெறுப்பு. அதன் மைய கருத்தாக பாஜகவிற்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கொடுத்துள்ளார்கள். அதற்காக தமிழகத்தை பழி தீர்க்கக் கூடாது. அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் ராமர் கோவில் உண்டியலில் கையை வைத்து விட்டார்கள். பாஜகவினர் உண்டியல் களவாணிகள் என்பது தெரிந்துள்ளது.

    Advertisement
    காங்கிரஸ் தோற்றது ஏன் தெரியுமா.. இனி நம் பாதை இதுதான்.. மாணிக்கம் தாகூர் அதிரடி

    பிரதமர் மோடி

    ஆர்எஸ்எஸ்காரர்கள் கோவில் காசு களவாண்டு தான் அரசியல் செய்கிறார்கள் என்பது வெளியே வந்துவிட்டது பிடிபட்ட திருடர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி கோவிலை திறக்க வந்தார். இப்போது திருட்டு நடந்துள்ளது. அதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. ராமர் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை பாஜகவினர் வாய் திறக்காதவர்கள் குறித்து பாராளுமன்றத்தில் நிச்சயம் பேசுவோம். ராமருகே நீதி வாங்கும் நிலையில் இருக்கிறோம். பாஜகவிற்கு எல்லாமே வியாபாரம், பணம் வசூல், இதுதான் அவர்களின் பழக்கம். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

    Advertisement

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரனை பொறுத்தவரை, அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதே அக்கறையை அவர் அதிமுகவை ஒருங்கிணைப்பதில் காட்டியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி, இந்த சூழலுக்கு வந்திருக்காது. அவர் செய்த வேலையால்தான் அதிமுகவுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளது. அதிமுகவை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றதே டிடிவி தினகரன்தான்.

    கோர்ட் வரை 'குட்டு’.. ஆர்என் ரவி பாதையில் அர்லேகர்! பாகுபாடும் பாசிசமும்.. மாணிக்கம் தாகூர் அட்டாக்

    அதிமுக

    முதலில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் வேலையை அக்கட்சியினர் பார்க்கட்டும். பிறகு திமுகவுடன் ஒருங்கிணைவது குறித்து பார்க்கலாம். அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் பொறுப்பு அவருக்குத்தான் சேரும். இதே கருத்தை அவர் அதிமுகவை ஒருங்கிணைக்க பண்ணியிருக்கலாம். எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி இந்த சூழலுக்கு வந்திருக்காது. முதலில் அதிமுகவை ஒருங்கிணைக்க பார்க்கட்டும்" என்றார்.

    English Summary

    Manickam Tagore says TTV Dinakaran weakened AIADMK instead of uniting it, targeting the party's current political crisis.