விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும்.. சிபிஐ வீரபாண்டியன் அறிவிப்பு

  • சென்னை: காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. கூட்டணிக்கு பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இந்நிலையில் தவெக கூட்டணி பெயர் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆட்சியில் இருந்த திமுக எதிர்க்கட்சியானது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக ஆலோசனை கூட்டம்

    காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. மதிமுகவும் தவெக கூட்டணியில் உள்ளது. தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவளிக்கிறோம். ஆனால் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. தவெக கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் கோவளத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் பனையூர் தவெக அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதுகுறித்து சென்னையில் சிபிஐ கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக தலைமையில் தேர்தல் கூட்டணி அமையவுள்ளது. இதற்கு பெயர் சூட்டும் நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கலந்துகொள்ள வேண்டுமென நேரில் வந்து அழைத்தனர். அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து எங்கள் கட்சியின் நிர்வாகக் குழுவை கூட்டி ஆலோசித்தோம். காலை முதல் மாலை வரை விவாதித்தோம்.

    Advertisement

    தவெகவுக்கு ஏன் ஆதரவு

    தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக ஆதரவு தொடர்கிறது. நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி மக்கள் அதிகாரத்தை கடந்து ஆளுநர் வந்து அமர்ந்துவிடக்கூடாது. அதற்காக தவெகவை ஆதரித்தோம். அமைப்பாக கூட அரசியலாக நாங்கள் எடுத்த முடிவு இது. அது தொடர்கிறது. தவெக மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்க வேண்டும். நிச்சயமாக நிற்போம் என்று முதலமைச்சர் விஜய் பலமுறை அறிவித்துள்ளார்.

    அது மெய்ப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். உழைக்கும் மக்கள், கூலித்தொழிலாளிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள், சாலை பணியாளர்கள், அரசு ஊழியர்கள் இப்படி ஏராளமான எளிய மக்கள் தங்கள் கோரிக்கைக்காக நாள்தோறும் போராடுகிறார்கள். பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்பட அனைவரின் கோரிக்கையை தவெக நிறைவேற்ற வேண்டும்.தொழிற்சங்கங்களை அழைத்து பேசி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். மத்திய அரசு போதிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

    English Summary

    CPI State Secretary Veerapandiyan said, TVK called for alliance name announcement event. We will give our support to tvk government.