மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி.. விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு

  • சென்னை: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு, கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விஜய் தலைமையில் இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தை இடதுசாரிகள் புறக்கணித்து இருந்தன.

    Advertisement

    தவெக தலைவரும் முதல்வருமான விஜய், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தவெக கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Vijay-led TVK alliance has been named the “Secular Social Justice Victory Alliance” after a consultation meeting with alliance parties in Chennai: தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு