5 ஆண்டுக்கு ஆதரவு தொடருமா? பெ.சண்முகம் சொன்ன வார்த்தை.. மீண்டும் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள்?

  • சென்னை: 5 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள பதில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ஏற்கனவே தவெக கூட்டணியில் இணைய கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பாத சூழலில், லோக்சபா தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம் இன்று மாலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதன் மூலமாக தவெக தலைமையில் கூட்டணியை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்தது.

    Advertisement

    ஆனால் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் முன் வரவில்லை. இதனை வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். ஆனால் ஆட்சிக்கான ஆதரவு தொடரும் என்று அறிவித்திருக்கின்றனர். இருப்பினும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தரப்பில், 5 ஆண்டுகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தொடர்வது தவெகவின் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் உள்ளது என்றார்.

    இதன் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வார்னிங்கை தவெகவுக்கு கொடுத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தலில் தவெக வென்றால், அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தேவையாக இருக்காது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை விலக்கி கொள்ள வேண்டிய நிலைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் மதுரை மேயரை இதுவரை திமுக நியமிக்கவில்லை. சிபிஎம் கட்சியைச் சேர்ந்த துணை மேயரான நடராஜன் தான் பொறுப்பு மேயராக இருந்து வருகிறார். திமுக நினைத்திருந்தால், மேயரை நியமனம் செய்திருக்கலாம். ஆனால் சிபிஎம் கட்சியின் கோரிக்கையை ஏற்று திமுக மேயரை நியமிக்காமல் அமைதி காத்து வருவதாக தெரிகிறது.

    மதுரை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இதுதொடர்பாக ஸ்டாலினிடம் பேசிய போதும் கூட, அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் இன்னும் திமுக நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. தவெகவுக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை கம்யூனிஸ்ட் மாணவ இயக்கங்கள் முன் வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கட்சி ஆலோசிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK Alliance: Reluctant to Join TVK Front, CPIM Likely to Align With DMK for Lok Sabha Polls