கணவனுக்கு ஜெயில்.. மனைவிக்கு போஸ்டிங்! விஜய் சொன்ன மாற்றம் இதுதானா? கேள்வி எழுப்பும் தவெகவினர்!

  • சென்னை: லஞ்சம் வாங்கிய புகாரில், செங்கல்பட்டு தவெக நிர்வாகி வீராசாமி கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது.. தவெகவுக்கு உள்ளேயும் சலசலப்புகளை கிளப்பியிருக்கிறது.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக மாவட்ட இணை செயலாளராக இருந்தவர்தான் வீராசாமி. மேடைக்கு மேடை தூய சக்தி என்று முதல்வர் விஜய் வீர வசனம் பேசி வந்த நேரத்தில், இந்த வீராசாமி பார்த்த வேலை.. மொத்த கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தது.

    Advertisement

    மாம்பாக்கம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் முடித்திருந்தார். இதற்கான பில் விடுவிக்கப்பட வேண்டும். எப்போ சார் பில்லை ரிலீஸ் பண்ணுவீங்க என்று ஒப்பந்ததாரர் வீராசாமியிடம் கேட்க.. வெட்ட வேண்டியதை வெட்டினால்.. பில் அமொவுண்ட் வரும் என்று வீராசாமி சொல்ல.. ரூ.1.3 லட்சத்தை ஒப்பந்ததாரர், வீராசாமிக்கு அனுப்பியிருக்கிறார்.

    ஊரெல்லாம் தூய சக்தி என்று விஜய் பேசி வரும் நேரத்தில், டேபிளுக்கு அடியில் கை நீட்டி, தவெக நிர்வாகி ரூ.1.3 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ சோஷியல் மீடீயா முழுவதும் தீயாக பரவியது. இதையடுத்து வீராசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்திருந்தது. இதையடுத்து வீராசாமி தவெகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

    Advertisement

    காவல்துறையின் இந்த நடவடிக்கை, விஜய் தலைமையிலான அரசின் தைரியமான மூவ் என்று பாராட்டப்பட்டது. சொந்த கட்சி நிர்வாகி தவறு செய்தாலும்.. எங்க தலைவர பார்த்தியா.. எப்படி தைரியமாக கைது செஞ்சு ஜெயில்ல போட்டாரு என்று தவெகவினர் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொண்டனர். ஆனால், இந்த பெருமைக்கு தற்போது பெரிய ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

    லஞ்ச வழக்கில் 15 நாட்கள் ஜெயிலில் இருந்த வீராசாமியின் மனைவி ஹேமாவதிக்கு, தவெக செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளர் என்கிற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. லஞ்ச பணம் வாங்கிய வீராசாமியின் வீடியோவில், ஹேமாவதி அந்த பணத்தை வீராசாமியிடமிருந்து வாங்கி பேகில் சைஸாக அடுக்கியிருந்தார். அப்பேற்பட்டவருக்கா கட்சியில் முக்கிய பொறுப்பு? என்று தவெகவினரே கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    முதல்வர் விஜய் சொன்ன மாற்றம் இதுதானா? லஞ்ச வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதன் மூலம் தவெக தலைமை என்ன சொல்ல வருகிறது? லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாலும்.. மனைவிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து காப்பாற்றுவோம் என்று கூறுகிறதா? என தவெகவினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    TVK: Veerasamy, a TVK functionary in Chengalpattu, was removed from all party posts following allegations of accepting a bribe. Amidst this, the decision to appoint his wife to a key position within the party has sparked a stir—not only among opposition parties but also within TVK itself.