தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ.. கூட்டத்தை காட்ட வெளியூர்களில் இருந்து மக்களை அழைத்து வந்த தவெகவினர்

  • சென்னை: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ செல்கிறார். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய உள்ள நிலையில், விஜய் 30 கிலோ மீட்டருக்கும் மேல் ரோடு ஷோ செல்கிறார். விஜய் செல்லும் வழியில் கூட்டத்தை காட்டுவதற்காக சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பேருந்து, லாரிகளில் மக்களை தவெகவினர் தாரபுராத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (6 ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரசாரத்திற்கு இன்று கடைசி நாள் என்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

    Advertisement

    தவெக மீது அதிருப்தி

    இடைத்தேர்தலில் தவெக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களே தவெகவில் வேட்பாளர்களாக அறிவித்து இருப்பதை மக்கள் ரசிக்கவில்லை என்று சொல்லப்படுவதால், அதிருப்தியை சரி கட்ட விஜய், இரண்டாவது முறையாக தாராபுரம் வருகை தந்துள்ளார். கிராமம் கிராமாக திறந்த வேனில் நின்று விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    பேருந்துகள், லாரிகளில் அழைத்து வந்ததாக

    கடந்த 2 ஆம் தேதி மதுராந்தகத்தில் 50 கிலோமீட்டருக்கும் மேல் விஜய் பிரசாரம் செயதார். பல ஊர்களில் மக்கள் போதிய வரவேற்பு அளிக்காததால் தவெகவினர் அப்செட் ஆகினர். விஜய்யை பார்ப்பதற்காக மக்கள் முண்டியடிப்பார்கள் என நினைத்துக்கொண்டு இருபக்கமும் தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தியிருந்தனர்.

    Advertisement

    ஆனால் பல பகுதிகளில் ஒன்றிரண்டு மக்கள் மட்டுமே விஜய்யை பார்த்து கை காட்டியதையும் பார்க்க முடிந்தது. இதைப்பார்த்து விஜய்யும் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில், தான் தாராபுரம் தொகுதியில் விஜய் இன்று ரோடு ஷோ செல்ல உள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் மக்களை வேன்கள், பேருந்துகள், லாரிகள், டாடா ஏஸ் வாகனத்தில் தவெகவினர் அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

    30 கிமீ தூரம் ரோடு ஷோ

    விஜய்யை பார்க்க போதிய ஆர்வம் மக்கள் காட்டாததால் கூட்டத்தை காட்டுவதற்காக வெளியூர்களில் இருந்து தவெகவினர் பேருந்து ஏற்பாடு செய்து கட்சியினரை பணம் கொடுத்து அழைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமசித்ததையும் பார்க்க முடிந்தது. முதல்வர் விஜய் இன்று தாராபுரத்தில் 30 கிலோ மீட்டருக்கு மேல் வாகனத்தில் ரோடு ஷோ செல்கிறார்.

    Advertisement

    கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த விஜய், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல் நிலையம் சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், வஞ்சியம்மன் கோயில், மூலனூர், கரையூர், குளத்துப்பாளையம், நளினி கல்லூரி சந்திப்பு, அலிங்கம் ரோடு சந்திப்பு, உடுமலை ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் மாருதிநகர் ஹெலிகாப்டர் தளம் வருகிறார். அங்கிருந்து கோவை சென்று மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    English Summary

    TVK Vijay Dharapuram: TVK leader Vijay is conducting a roadshow in Dharapuram today in support of the party's candidate, Sathyabhama. With campaigning set to conclude this evening, Vijay is undertaking a roadshow spanning over 30 kilometers. It is reported that TVK cadres have brought people in buses and lorries from areas including Salem to Dharapuram to ensure a large crowd along Vijay's route.