இடைத்தேர்தல்: தவெக சார்பில் பிரச்சாரக் களத்தில் 40 ஸ்டார் பேச்சாளர்கள்.. லிஸ்ட்டை பாருங்க!

  • சென்னை: இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களுக்காக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 5 முனை போட்டி நிலவுகிறது. திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனை போட்டி உள்ளது.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களாக தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

    அதேபோல, தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 40 பேர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தொடங்கி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தலைவர்கள் பலரது பெயரும் இடம் பெற்றுள்ளது.

    முதல்வர் ஜோசப் விஜய், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக எம்.பி துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசிக எம்.பி ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்ட 40 பேருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

    Advertisement

    மேலும், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், விஸ்வநாதன், லோகேஷ் தமிழ்ச்செல்வன், வன்னி அரசு, விஸ்வநாதன், மரிய வில்சன் மற்றும் லயோலா மணி, வைகைச்செல்வன், புகழேந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    English Summary

    Leaders of alliance parties—including the Congress, VCK, MDMK, and IUML—are set to campaign for the Tamilaga Vetri Kazhagam candidates in the by-election. A list of 40 TVK star campaigners has been released.