அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி கூடாது.. சிவி சண்முகத்திற்கு திருமா வைத்த ஆப்பு.. சொல்லை தட்டாத விஜய்!

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த தவெகவின் புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் இந்த விரிவாக்க பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    Advertisement

    அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸுக்கு இடம் கிடைக்குமா என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள 23 புதிய அமைச்சர்கள் பட்டியலில் ஒருவழியாக காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லி மேலிடத்தின் தீவிர பேச்சுவார்த்தை மற்றும் உள்ளூர் அரசியல் கணக்குகளின்படி இந்த 2 இடங்கள் காங்கிரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    Advertisement

    காங்கிரஸ் தனக்கான 2 இடங்களை தட்டித்தூக்கியுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்னும் கூடுதலாக 2 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, இந்த 2 இடங்களும் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகிய கட்சிகளுக்காகவே பிரத்யேகமாக 'ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அமைச்சரவையில் இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த 25 எம்.எல்.ஏ-க்கள்; ஆனால் ஏமாற்றம்!

    கடந்த வாரம் நடைபெற்ற தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது (Floor Test), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) உத்தரவை மீறி, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி முகாம்களைச் சேர்ந்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் TVK அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    இந்த அதிரடி ஆதரவைத் தொடர்ந்து, இந்த அதிருப்தி முகாமிற்குப் புதிய அமைச்சரவையில் நிச்சயம் இடம்கிடைக்கும் என அரசியல் வட்டாரங்களில் மிக பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியாகியுள்ள 23 பேர் கொண்ட பட்டியலில் அதிமுக அதிருப்தியாளர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. இது அந்த முகாமிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முட்டுக்கட்டை போட்ட திருமாவளவன்: பின்னணி என்ன?

    அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனதற்குப் பின்னால் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் கடுமையான அரசியல் நிலைப்பாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    தவெக அமைச்சரவையில் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறக் கூடாது என்பதில் விசிக தலைவர் திருமாவளவன் மிக உறுதியாகவும் கண்டிப்பாகவும் இருந்துள்ளார். கொள்கை ரீதியாகவும், கூட்டணிக் கணக்குகளின்படியும் இவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது சரியாக இருக்காது என அவர் முட்டுக்கட்டை போட்டதால், கடைசி நேரத்தில் அதிமுக அதிருப்தியாளர்களின் அமைச்சர் கனவு கலைந்துள்ளதாக அறிவாலய மற்றும் டிவி கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவர்களை சேர்த்தால் நான் இருக்க மாட்டேன் என்று திருமா கூறி இருக்கிறாராம்.

    Advertisement

    புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் சட்டசபை தொகுதிகள் முழுப் பட்டியல்:

    அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள 23 புதிய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் மற்றும் அவர்களின் தொகுதிகள் பின்வருமாறு:

    ஸ்ரீநாத் - தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி (214)

    எஸ். கமல் - அவினாசி சட்டமன்றத் தொகுதி (112)

    சி. விஜயலட்சுமி - குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி (97)

    ஆர்.வி. ரஞ்சித்குமார் - காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி (37)

    வினோத் - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி (171)

    ராஜீவ் - திருவாடானை சட்டமன்றத் தொகுதி (210)

    பி. ராஜ்குமார் - கடலூர் சட்டமன்றத் தொகுதி (155)

    Advertisement

    வி. காந்திராஜ் - அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி (38)

    பி. மதன் ராஜா - ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி (217)

    கே. ஜெகதீஸ்வரி - ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி (202)

    எஸ். ராஜேஷ் குமார் - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி (234)

    எம். விஜய் பாலாஜி - ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி (98)

    டி. லோகேஷ் தமிழ்செல்வன் - ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி (92)

    ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி (90)

    ரமேஷ் - ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி (139)

    Advertisement

    பி. விஸ்வநாதன் - மேலூர் சட்டமன்றத் தொகுதி (188)

    ஆர். குமார் - வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி (26)

    கே. தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி (29)

    வி. சம்பத் குமார் - கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (118)

    ஜெ. முகமது பர்வாஸ் - அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி (183)

    டி. சரத்குமார் - தாம்பரம் சட்டமன்றத் தொகுதி (31)

    என். மேரி வில்சன் - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் [ஆர்.கே. நகர்] (11)

    கே. விக்னேஷ் - கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி (122)

    அதிமுக அதிருப்தியாளர்களைப் புறக்கணித்து, திருமாவின் அழுத்தங்களுக்கு மதிப்பளித்து வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அமைச்சரவை பட்டியல், தமிழக அரசியலில் அடுத்தகட்ட விவாதங்களை கிளப்பி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    English Summary

    TVK Cabinet: 23 New Ministers In, Big Shock for AIADMK Rebels as VCK Thirumavalavan Blocks Entry