பசிக்குது, ஆளை விடுங்க! தவெக இணைப்பு விழாவில் பாதியில் வெளியேறிய தொண்டர்கள்.. கதவை பூட்டிய நிர்வாகிகள்

  • சென்னை: தவெக இணைப்பு விழாவில் கூட்ட அரங்கிற்குள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் இருந்த நிலையில், தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே சுமார் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் கிளம்பி சென்றனர். மதிய உணவும் ரெடியாகிவிட்டதால், சாப்பிடவாவது போவோம் என்று ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டு, சாரை சாரையாக கிளம்பி சென்றனர். இதனால் இருக்கைகள் காலியானது. இதற்கு மேல் விட்டால் மொத்த அரங்கமும் காலியாகிவிடும் என நினைத்தார்களோ என்னமோ.. உடனடியாக நிர்வாகிகள் கதவை பூட்டிவிட்டனர்.

    Advertisement

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இதில் தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர். இதற்காக 100 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புதுக்கோட்டை மற்றும் கரூரில் இருந்து தொண்டர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.

    Advertisement

    அவர்களுக்காக காலை மற்றும் மதியம் சுடச்சுட உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. காலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே காலை டிபனை சாப்பிட்டு விட்டு வந்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் இருக்கையை காலி செய்தனர். 11 மணிக்கு பிறகே நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், விஜய்யும் வரவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்தவர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற தொடங்கினர்.

    மதிய உணவும் ரெடியாகிவிட்டதால், சாப்பிடவாவது போவோம் என்று ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டு, சாரை சாரையாக கிளம்பி சென்றனர். கூட்ட அரங்கிற்குள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் இருந்த நிலையில், 1,500 க்கும் மேற்பட்டவர்கள் கிளம்பி சென்றனர். இதனால் இருக்கைகள் காலியானது. இதற்கு மேல் விட்டால் மொத்த அரங்கமும் காலியாகிவிடும் என நினைத்தார்களோ என்னமோ.. உடனடியாக நிர்வாகிகள் கதவை பூட்டிவிட்டனர்.

    Advertisement

    கூட்டத்தில் காலி சேர்களே பின்வரிசையில் பல்லை காட்டியதை பார்த்து அதிச்சி அடைந்த சி. விஜயபாஸ்கர், மேடையில் பேசிய போது இதனை சமாளிக்கும் விதமாக பேசினார். விஜயபாஸ்கர் கூறுகையில், புஸ்சி ஆன்ந்தை பார்க்க அனைவரும் முன்வரிசைக்கு எழுந்துவிட்டாரக்ள் என்று கூறி சமாளித்தார். தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவறான முடிவை எடுத்ததாகவும் தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    English Summary

    TVK Joining Event: A large number of cadres reportedly walked out of the TVK joining event while leaders were still addressing the gathering, saying they wanted to leave for lunch. As seats began to empty, organisers allegedly locked the venue doors to prevent more attendees from leaving.