பெரும் தேர்தல் முறைகேடு! நாடு முழுக்க தலைவர்கள் கொந்தளிக்கும் போது விஜய் மௌனம் ஏன்? இடிக்குதே

  • சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் (SIR) எழுந்த குளறுபடிகள் குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட புலனாய்வுத் தகவல்கள் தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

    Advertisement

    தேர்தல் ஆணையத்தின் இரண்டு ஆணையர்களே 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்தது வெளிச்சத்திற்கு வந்ததும், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றன.

    Advertisement

    திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், பாரபட்சமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி வருகின்றன. தமிழ்நாட்டிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாகக் கூறி, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டக் குரல்கள் வலுத்து வருகின்றன.

    விஜய் மற்றும் தவெகவின் மௌனம்: அரசியல் வட்டாரத்தில் விவாதம்

    நாடு முழுவதும் இத்தனை பெரிய அரசியலமைப்பு சர்ச்சை வெடித்துள்ள சூழலில், தமிழ்நாட்டின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய் மற்றும் அவரது கட்சி எந்தவிதமான அதிகாரப்பூர்வ எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காப்பது அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

    Advertisement

    பொதுவாக மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள், நீட் தேர்வு, சமூகப் பிரச்சனைகள் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த தமிழக அரசு.. விஜய் ஆட்சிக்கு வந்த பின் அமைதி காத்து வருகிறது. தேர்தல் ஆணையத்திற்குள் நிகழ்ந்துள்ள இந்த உட்கட்சி மோதல் மற்றும் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் இன்னும் தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    விமர்சனங்களும் அரசியல் பின்னணியும்

    இந்த அமைதியை முன்வைத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன:

    1. எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: பாஜக மற்றும் மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் இவ்விவகாரத்தைக் கண்டிக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பாஜகவை ஆதரிக்கும் தரப்புகள் மட்டுமே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்காமல் மெளனம் சாதிப்பதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர், விஜய்யின் நிலைப்பாட்டையும் அதனுடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர்.

    Advertisement

    2. *தவெக தரப்பு பார்வை: அதேவேளையில், கட்சி தரப்பில் உள்ள சிலர், முழுமையான சட்ட ஆவணங்கள் மற்றும் அடுத்தகட்ட நீதிமன்ற நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த பிறகே அதிகாரப்பூர்வ கருத்துகளை வெளியிடுவது தவெகவின் வழக்கம் என்றும், அரசியல் மோதல்களில் அவசரமாகக் கருத்து கூறாமல் நிதானம் காப்பதாகவும் கருதுகின்றனர்.

    ஜனநாயகத்தின் ஆணிவேரான வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது நாடு தழுவிய விவாதம் நடக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யின் இந்த அமைதி, அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

    குற்றச்சாட்டு பின்னணி என்ன?

    இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. SIR குறித்து தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களில் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேபினட் செயலாளருக்கு இவர்கள் அனுப்பிய 14 கடிதங்களை ஆய்வு செய்ததில் இந்த மோதல் அம்பலமாகி உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்க்கை, பெயர் நீக்கம் மற்றும் FORM 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை என இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் நடத்திய புலனாய்வு விசாரணையில், கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக குறைந்தபட்சம் 14 முறை தங்கள் எதிர்ப்பு கடிதங்களை பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 முறை ஆட்சேபனை கடிதங்கள் அனுப்பப்பட்ட சம்பவங்களும் இதில் அடங்கும்.

    Advertisement

    வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (Special Intensive Revision - SIR) நடவடிக்கைகளில் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், தங்கள் ஆலோசனைகளை மீறி சட்டவிரோதமான நடைமுறைகள் புகுத்தப்படுவதாகவும் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    English Summary

    TVK Chief Vijay’s Silence on ECI Voter List Controversy Sparks Political Buzz in Tamil Nadu