அன்பில் மகேஷ் மட்டுமல்ல.. திமுகவின் மொத்த தூண்களையும் தூக்கும் விஜய்.. அடித்து ஆட முடிவு?

  • சென்னை: திமுக மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதை அடுத்து, திமுகவின் சீனியர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் கிலி ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    தனக்கு எதிரான மோசடி வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டதும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அன்பில் மகேஷ். இந்த கைதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், எதிர்வினையாற்ற வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட சம்பிரதாய கண்டனமாகத்தான் திமுகவின் சீனியர்கள் கணிக்கின்றனர்.

    Advertisement

    ஏனெனில், விஜய் அரசு வந்ததற்கு பிறகு, திமுக மாஜிக்கள் தொடர்பான ஊழல் விவகாரங்களை அம்பலப்படுத்தி, திமுக ஊழல் கட்சி என்கிற இமேஜ்ஜை நிலை நிறுத்துவதுதான் விஜய்யும் விஜய்யை சுற்றியிருக்கும் அதிகார மையமும் போட்டிருந்த வியூகம். அதனடிப்படையில்தான், திமுக மாஜிக்களுக்கு எதிராக ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இது குறித்து சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் திமுகவுக்கும் கடும் வாக்குவாதமெல்லாம் நடந்தது.

    இந்த நிலையில், அப்போதே திமுக மாஜிக்களுக்கு கட்சித் தலைமையிட மிருந்து முக்கிய விசயங்கள் பகிரப்பட்டன. அதாவது, தங்கள் மீதான வழக்குகள் பாயும் போது அதிலிருந்து தப்பிப்பதும், நீதிமன்றத்திலிருந்து விடுதலை ஆவதும் உங்களின் தனிப்பட்ட பொறுப்பு. நீங்கள் கைது செய்யப் பட்டால் கட்சி தலைமையிடமிருந்து ஒரு கண்டன அறிக்கை வரும். அவ்வளவு தான். தேவைப்பட்டால் கட்சியின் சீனியர் வழக்கறிஞர்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான வக்கீல் ஃபீஸ் நீங்கள் தான் செலுத்த வேண்டும். அதனால், தனிப்பட்ட முறையில், லாபி செய்து கொள்ளுங்கள் என்று 2 மாதங்களுக்கு முன்பே தெரிவித்து விட்டது கட்சித் தலைமை.

    Advertisement
    யார் இந்த சண்முகப்பிரியா? அன்பில் மகேஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. எப்படி போகஸுக்கு வந்தார்?

    அந்த வகையில்தான், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஏ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் தங்கள் மீதான வழக்குகளை சரி செய்ய தங்களின் சோர்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், எப்படியும் முன் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அன்பில் மகேஷ். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. அதனால் தான் அன்பில் மகேஷ் கைது குறித்து கட்சி தலைமை கொடுத்த கண்டனங்கள் வெறும் சம்பிரதாயம் தான் என்று சீனியர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    திமுகவின் மொத்த தூண்களையும் தூக்கும் விஜய்

    இதற்கிடையே, அன்பில் மகேஷ் கைதை அடுத்து, மாஜிக்கள் நேரு, வேலு, சேகர்பாபு, செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பீதி தெரிகிறது. ஒருவருக்கொருவர் இவர்கள் தொடர்பு கொண்டு விவாதிக்கிறார்கள். அன்பில் மகேசுக்கு அடுத்து நாமாக இருப்போமா? என்கிற கிலி அவர்களிடம் தொக்கி நிற்கிறதாம். இந்த பயம், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற ரீதியில், விஜய் அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்களை எப்படி அணுகுவது என்கிற தேடுதலில் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.

    அன்பில் மகேஷ் கைது சரவெடி வைங்க.. என்கிட்டயே பணம் வாங்கினார்.. தீயாய் பரவும் திமுக நிர்வாகி ஆடியோ
    Advertisement

    இந்த நிலையில், அன்பில் மகேஷை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் திட்டமிட்டுள்ளது. தங்கள் கஸ்டடியில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தும்போது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகரம் வழங்குவது குறித்த விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழல் பணம் 420 கோடி ரூபாய். இதனை யார் யாருக்கு பங்கு போட்டு கொடுத்தீர்கள்? இதில் உதயநிதிக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது? கட்சி தலைமைக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது? என்பது உள்பட அவரிடம் கேட்ப தற்காக 120 கேள்விகள் தயாரித்து வைத்திருக்கிறதாம் போலீஸ். அதாவது, இந்த ஊழலில், உதயநிதியை கொண்டுவரும் வகையிலேயே கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

    Advertisement

    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்த போது, ஸ்டாலினை சிக்க வைக்கும் வகையிலேயே கேள்விகள் கேட்கப்பட்டது. அவரை (ஸ்டாலின்) கைக் காட்டி விடுங்கள். உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்றெல்லாம் அமலாக்கத்துறை வலியுறுத்திய போதும் கூட, ஸ்டாலினை கைக்காட்டவில்லை செந்தில்பாலாஜி. அதேபோல ஒரு சோதனை அன்பில் மகேஷுக்கு ஏற்படவிருக்கிறது. ஆனால் எந்த சூழலிலும், உதயநிதியை காட்டிக் கொடுக்க மாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் அழுத்தமாகச் சொல்கிறார்கள் நம்மிடம் !

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    CM VIjay focuses on DMK senior leaders after Anbil Mahesh Case