சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஒரே கூட்டணியில் உள்ள தவெக - காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் பேசி வருவதால் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் தவெக - காங்கிரஸ் மோதலுக்கு தீர்வு கூறியுள்ளார் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் விஜய் என்ற பேச்சு தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது. இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் இணைந்து சமீபத்தில் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில் 2029ல் பிரதமர் வேட்பாளருக்கான ஆதரவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தக் கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி 48.7%, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 27.1% மற்றும் முதலமைச்சர் விஜய் 9.2% வாக்குகளைப் பெற்று முதல் மூன்று இடத்தில் உள்ளனர். தவெக அமைச்சர்களும், தவெகவினரும் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் எனும் ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். "விஜய்தான் அடுத்த பிரதமர்.. முதலமைச்சராக பதவியேற்கும்போது விஜய்யை எப்படி ராகுல் காந்தி கைபிடித்து அழைத்துச் சென்றாரோ, அதேபோல, பிரதமர் இருக்கையிலும் விஜய்யை அமர வைப்பார் ராகுல் காந்தி" என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார் தவெக எம்.எல்.ஏ கனிமொழி. இதற்கு முன்பு, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தின்போது சட்டசபையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தென்னாட்டிலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும். அதற்கான வாய்ப்பு உருவாக வேண்டும்" என்று பேசியிருந்தார். தவெக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வரும் சூழலில், பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் தெரிவித்து வருவது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரும், ராஜ்யசபா எம்.பி பிரவீன் சக்கரவர்த்தியும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் அரங்கில் புருவங்களை உயரச் செய்தது. இந்நிலையில் தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வேண்டுமானால் விஜய் பிரதமர் ஆகலாம் என திமுக செய்தித்தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "விஜய் தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையை பெறவில்லை. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியே அமைத்துள்ளார். அப்படியிருக்க, அவரால் எப்படிப் பிரதமராக முடியும்? ஒருகாலத்தில் தமிழ்நாட்டை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்தோம். அப்படி விஜய் வேண்டுமானால் தமிழ்நாட்டை தனி நாடாக்கினால் பிரதமர் ஆகலாம். ஒரு மாநிலத்திலேயே அவரால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்தி வருகிறார். அதிலும் காங்கிரஸ் ஆதரவோடு, 5 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராகுல் காந்தி பிரதமர் ஆகவேண்டும் என இருக்கிறார்கள்.பிரதமராக விஜய்?
தவெகவினர் பேச்சு
காங்கிரஸ் - தவெக உரசல்
தவெகவினர், விஜய் பிரதமர் ஆவார் எனக் கூறிவரும் நிலையில், அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே இருப்பதாக காங்கிரஸ் கட்சியிர் விமர்சித்து வருகின்றனர்.டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
நாளையே அவர்கள் ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்று கூறினால், இந்த ஆட்சியே கவிழ்ந்துவிடும். பின் மற்ற மாநிலங்களில் எப்படி வெல்ல முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் டிகேஎஸ் இளங்கோவன்.