15 லட்டு! கவுன்சிலர் ஆசை காட்டி..கல்லா கட்டும் மா.செ.க்கள்! சிஎம் டேபிளில் ரிப்போர்ட்! களையெடுப்பு?

  • சென்னை: பனையூர் வட்டாரங்களில் ஒரு மிக முக்கியமான தகவல் தற்போது பேசப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலில் தவெக ஜெயித்திருக்கும் நிலையில் பலரும் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் ஆசை காட்டி பலரிடம் கல்லா கட்ட தொடங்கி இருக்கிறார்களாம் மாவட்ட செயலாளர்கள். மாநகராட்சிக்கு 15, நகராட்சிக்கு, 10 ஒன்றியத்துக்கு 5 என லட்டுகளில் டீலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவல் உளவுத்துறை மூலம் சிஎம் டேபிளுக்கு சென்றிருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர்களை களையெடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்று இருக்கிறார். கட்சி ஆரம்பித்தபோது பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கூட்டணிக்கும் யாரும் வரவில்லை.

    Advertisement

    ஆட்சியில் பங்கு.. அதிகாரத்தில் பங்கு.. என பேசியுமே யாருமே வராததால் தனித்துப் போட்டியிட்ட இருந்த போதும், வெற்றிக்காற்று அவரது பக்கமே வீசியது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது தமிழக வெற்றிக் கழகம்.

    ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து இருக்கிறது. இதற்கிடையே ஆளுங்கட்சியோடு இருந்தால் நமக்கு பலம் என நினைத்து பலரும் தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் தாவி வருகின்றனர். விஜய் கட்சி ஆரம்பித்தபோது சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு பிறகு ஆன்லைன் மூலம் ஏராளமான ஒரு கட்சியில் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    மெயின் தலைகள் மீடியாக்களில் தலைப்புச் செய்தியாகிவிட்ட நிலையில் சத்தமில்லாமல் பலரும் ஆன்லைன் மூலம் அக்கட்சியில் சேர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பதவிகள் மட்டுமே தற்போது நிரப்பப்பட்டு இருக்கிறது. மாநகர், நகர் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கான நியமனம் இன்னும் நடைபெறவில்லை.

    கடந்த தேர்தலில் பூத் கமிட்டி உள்ளிட்ட முழுமையான கட்டமைப்புகள் இல்லாத நிலையிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடியும் என்றால்.. முழுமையாக அனைத்து நிர்வாகிகள் நியமனத்தை முடித்தால் வரும் தேர்தல்களில் இன்னும் பெரிய வெற்றியை பெறலாம் என்பது தமிழக வெற்றி கழகத்தின் எண்ணம். இதனையடுத்து மாவட்ட செயலாளர்களுக்கு அனைத்து அணிகளுக்கான நியமனத்தையும் முடிக்க வேண்டும் என உத்தரவு பறந்து இருக்கிறது.

    Advertisement
    ஒரு நாளைக்கு 8 லிட்டர் பால்.. 10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்! தமிழக அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

    இதை அடுத்து மாநகர் நகர் ஒன்றிய அளவிலான கட்சியின் மெயின் பதவிகளுக்கும், சார்பு அணி பதவிகளுக்கும் பணம் பெற்று வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்ததும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் இறங்கியதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

    இந்த நிலையில் மற்றொரு விவகாரம் தமிழக வெற்றி கழகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்னும் 6 அல்லது 8 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இதை அடுத்து நீங்கள் தான் வார்டு செயலாளர், நீங்கள் தான் கவுன்சிலர் என சொல்லி மாவட்ட செயலாளர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் கல்லாக் கட்ட தொடங்கி விட்டார்களாம்.

    Advertisement

    ஆயிரங்களில் இல்லாமல் 'லட்டுகளில்' மட்டுமே தற்போது டீலிங் பேசப்பட்டு வருகிறதாம். மாநகராட்சிக்கு 15, நகராட்சிக்கு 10, ஒன்றியத்துக்கு 5 என லட்டுகளில் டீலிங் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலும் விஜய்யை நம்பி கட்சிக்கு வந்தவர்கள் பொருளாதார பின்னணி இல்லாதவர்கள். அதே நேரத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்தவர்கள் பணத்தை கொடுத்து எதையும் சாதித்து விடலாம் என நினைக்கிறார்களாம்.

    ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசு! ரூ.16800 வரை போனஸ்! சிஎம் விஜய் சர்ப்ரைஸ்!

    இதனால் கட்சிக்கு உழைத்தவர்கள்.. பல ஆண்டுகள் விஜய நம்பி ரசிகர் மன்றத்திலிருந்து பயணித்தவர்கள் கடும் ஆத்திரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் நிலையில் இது தொடர்பாக உளவுத்துறையும் முதல்வர் விஜய்க்கு தகவல் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் அப்செட் அடைந்துள்ள முதல்வர் விஜய் யார் யார் பணம் வசூலிக்கிறார்கள் என லிஸ்ட் தயார் செய்து கொடுங்கள். அவர்களையெல்லாம் தூக்கி விடுகிறேன் என கூறியதோடு, இது தொடர்பாக விசாரிக்க பொதுச் செயலாளர் ஆனந்துக்கும் உத்தரவிட்டுள்ளாராம்.

    English Summary

    Reports allege TVK district secretaries are seeking payments for local body positions, prompting complaints and a reported inquiry ordered by CM Vijay.