தவெக மா.செ மீது பா**யல் புகார்.. கம்ளைண்ட் கொடுத்த பெண் மீதே வழக்குப் பதிவு! வெளியான பகீர் பின்னணி!

  • ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண், அவரின் கணவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட த.வெ.க செயலாளராக இருப்பவர் விஜய்மோகன் . இவர் மீது ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியில் வசிக்கும் பவ்யலட்சுமி என்கிற திருமணமான வயது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுச் சுமத்தி பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

    இது தொடர்பாக விஜய்மோகனிடம் இன்ஸ்டாகிராமில் பழகியதாகவும், அப்போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகாரில் கூறியிருந்தார் பவ்யலட்சுமி. இதையடுத்து, கடந்த ஜூலை 23-ம் தேதி ஆற்காடு நகரக் காவல் நிலையப் போலீஸார் விஜய்மோகன் மீது வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணையை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் தான் போலீஸாரின் விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதும், சிலரால் இவ்விவகாரம் ஜோடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. புகார் கூறிய பவ்யலட்சுமி தனது கூட்டாளிகளுடன் பேசும் பல ஆடியோ உரையாடல்கள் வெளியாகி விவகாரத்தின் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    இதையடுத்து, பவ்யலட்சுமி மற்றும் அவரின் கணவன் நவீன் உள்பட கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலர் மீது மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி என்ற பிரிவின் கீழ் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே, பவ்யலட்சுமி அவரின் கணவன் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக அப்பெண் அளித்த புகாரில், விஜய் மோகன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அதற்கு பிறகு தொலைபேசி எண்ணையும் வாங்கியதாகக் கூறப்பட்டிருந்தது. முதலில் மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வாங்கி தருவதாக கூறிய விஜய் மோகன் அந்தப் பெண்ணிடம் நிர்வாண படங்களை பெற்றதாகவும், பின்பு அந்த படங்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்தார் என கூறியிருந்தார்.

    மேலும், தன் பேச்சை கேட்காவிட்டால் ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக புகார் கூறியிருந்தார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பெண் அளித்த புகாரின் பேரில், முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு விஜய் மோகன் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் புகாரியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலிசார் ஆதாரங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், தற்போது அப்பெண் மீதே வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Police register a case against a woman who accused TVK district secretary Vijay Mohan, following an investigation into the complaint.