தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்.. காய் நகர்த்தும் துரை வைகோ.. மதிமுகவுக்கு ஜாக்பாட் அடிக்குமா?

  • சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அவரது மகன் துரை வைகோ விதித்துள்ளதாக தெரிகிறது. வைகோவின் பேச்சுகள் தவெகவுக்கு மிகப்பெரிய சிக்கலை தொடர்ச்சியாக உருவாக்கி வரும் சூழலில், துரை வைகோ நேரடியாக தந்தையை பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக கூட்டணியில் மதிமுக இணைந்துவிட்டது. மதிமுகவின் 2 எம்எல்ஏ-க்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், இருவருமே திமுக எம்எல்ஏ-க்களாகவே கருதப்படுவார்கள். வைகோ பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், அவர்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

    Advertisement

    இருப்பினும் தவெகவுக்கு அரணமாக மதிமுக நிற்கும் என்று வைகோ அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் தவெக கூட்டணியில் இணைந்த பின் வைகோவின் பேச்சுகள் முதல்வர் விஜய்க்கே சங்கடத்தை உருவாக்கியது. மதிமுக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என்று விஜய் நேரடியாக கூறியதாக வைகோ உளறினார். இதனை பிடித்து கொண்ட திமுக, ஆளுநரிடம் நேரடியாக புகார் அளித்தது.

    இதனால் துரை வைகோவும் அதிர்ச்சி அடைந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் துரை வைகோ இருந்தார். ஆனால் திமுக ஆளுங்கட்சியாக மீண்டும் வந்துவிடும் என்பதால், துரை வைகோ அமைதி காத்தார். தேர்தலுக்கு பின் காட்சிகள் மாறிய நிலையில், துரை வைகோ நேரடியாக தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவு எடுத்தார்.

    Advertisement

    வைகோவிடமும் பேசி கூட்டணியை மாற்றினார். அதேபோல் தவெக பக்கம் சென்ற பின் மதிமுகவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வைகோவும் அதனை பெறுவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் அதனை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவுக்கு விஜய் கொடுத்துவிட்டார்.

    இதனால் துரை வைகோ அப்செட்டாகினார். ஆனால் தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வைகோவை கொண்டு வர வேண்டும் என்று துரை வைகோ தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதனால் வைகோ பேசும் போது கொஞ்சம் நிதானமாக பேச வேண்டும் என்று துரை வைகோ கட்டுப்பாடு விதித்திருப்பதாக அக்கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

    English Summary

    TVK: Durai Vaiko Advises Father Vaiko to Speak Mindfully as TVK Ties Face Strain