தவெகவுக்குள் நேரடியாக வரும் ஜான் ஆரோக்கியசாமி.. விஜய் கொடுக்கும் பெரிய பொறுப்பு.. அப்செட்டில் ஆதவ்!

  • சென்னை: தவெக துணைத் தலைவர் பதவிக்கு ஜான் ஆரோக்கியசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் விஜய்யுடன் அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்று வரும் சூழலில், அடுத்ததாக கட்சியிலும் முக்கிய பொறுப்பை கைப்பற்ற தீவிரமாக இருக்கிறார்.

    Advertisement

    அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி மற்றும் தவெக தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விவகாரத்தை கையில் எடுத்த திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளும், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

    Advertisement

    ஏற்கனவே முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி இருந்து வருகிறார். அவரது நியமனத்திலேயே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட சூழலில், விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆட்சியில் தலையிடுவது தவெகவுக்கு தலைவலியாக மாறியுள்ளது. ஆனால் முதல்வர் விஜய் இதைப்பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

    இதனிடையே நேரடி அரசியலுக்கு வர ஜான் ஆரோக்கியசாமி காய் நகர்த்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தவெகவில் துணைத் தலைவர் பதவியை பெற ஜான் ஆரோக்கியசாமி பேசி வருவதாக சொல்லப்படுகிறது. தவெகவில் இதுவரை துணைத் தலைவர் பதவி யாருக்கும் அளிக்கப்படவில்லை. தவெகவின் தலைவர் விஜய், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகின்றனர்.

    Advertisement

    இவர்களுக்கு பின் ஆதவ் அர்ஜுனா தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், கட்சியை பெரியளவில் கண்டுகொள்ளவில்லை. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரின் பொறுப்பிலும் விட்டிருக்கிறார். கட்சியினருக்கான பொறுப்புகளை மட்டும் விஜய்யுடன் ஆலோசித்து நியமனங்கள் நடந்து வருகிறது.

    இதனால் விஜய்க்கு நம்பிக்கையாக இருந்து வரும் ஜான் ஆரோக்கியசாமிக்கு துணைத் தலைவர் பொறுப்பை வழங்குவதன் மூலமாக கட்சியின் கட்டமைப்பை இன்னும் பலமாக்க முடியும் என்று விஜய் நம்புவதாக தெரிகிறது. ஆனால் ஜான் ஆரோக்கியசாமி நேரடியாக தவெகவில் இணைவதை ஆதவ் அர்ஜுனா தரப்பு ரசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஏற்கனவே தவெகவில் உட்கட்சிப் பூசல் உச்சத்தில் இருந்து வரும் சூழலில், ஜான் ஆரோக்கியசாமியின் என்ட்ரி தவெக தலைமையிலேயே அதிகார மோதலை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே ஜான் ஆரோக்கியசாமியை கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை விஜய் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    TVK: Election Strategist John Arokiasamy Reportedly Eyeing TVK Deputy Chief Post after gainthe trust of Vijay