16 தொகுதிகள் டார்கெட்.. தவெகவின் இடைத்தேர்தல் கணக்கு.. அதிர்ச்சியில் அறிவாலயம்

  • சென்னை: தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இடைத்தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, தங்களின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க தவெக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி நிலையான ஆட்சியை வழங்க தவெக காய் நகர்த்தி வருகிறது. இதில் அவுட் ஆஃப் சிலபஸாக திமுக கூடாரத்திலும் அதிருப்தியில் உள்ள 4 எம்எல்ஏக்களிடம் தவெக பேசி வருகிறதாம்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பதற்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு சிக்கல்

    விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஜே.சி.டி பிராபகர் சபாநாயகராக பொறுப்பேற்றார். இதனால், சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 106 ஆக குறைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு அதிமுக மற்றும் அமமுக எம்எல்ஏ ஆதரவு தெரிவித்தனர்.

    ஆதரவு தெரிவித்த அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகளால் பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல், விசிக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தற்போதுவரை காங்கிரஸ் மட்டுமே தவெகவின் கூட்டணியில் இணைந்துள்ளது. மற்ற கட்சிகள் வெளியில் இருந்து தான் தவெகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

    Advertisement

    எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    5 ஆண்டு ஆட்சி முழுமையாக செல்ல தவெக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருக்க கணக்கு போடுகிறார்கள். இதனால் அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள். ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் கடந்த வாரம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான எம்.ஆ ர். விஜயபாஸ்கர் நேற்று தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் தற்போதுவரை 7 சட்டமன்ற தொகுதிளுக்கு இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையுடன் இது நிற்க போவதில்லையாம். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி நீடிக்காது என்று விமர்சித்து வருகிறார்.

    Advertisement

    12 தொகுதிகளில் டார்கெட்

    தவெக ஆட்சிக்கு வருவதையே திமுக, அதிமுக தலைமைகள் தடுக்க நினைத்தனர். அடுத்த 5 வருடங்கள் தவெக ஆட்சியில் இருப்பதை திமுக நிச்சயம் விரும்பாது. பல்வேறு சதிகளை அவர்கள் செய்வார்கள் என்று சந்தேகிக்கிறோம். அதனால் இடைத்தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்று தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைக்க முயற்சி செய்கிறோம். அடுத்ததாக
    வட மாவட்டத்தை சேர்ந்த நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவுள்ளனர். இதன் மூலம் 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கலாம்.

    திமுக தலைமை மீதும் அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய ரகசிய பேச்சுவார்தை நடந்து வருகிறது. இது நடந்தால் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். இதில் வெற்றி பெற்றால் எந்த கட்சியின் ஆதரவு இல்லாமல் 5 வருடஙகள் தவெக ஆட்சி இருக்கும். விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரும் இதைத்தான் வலியுறுத்தியுள்ளார்" என்றனர்.

    English Summary

    TVK eyes in 16 constituencies Bi election. Not only ADMK. TVK also targeting Some DMK MLA's made shock to Arivalayam.