கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது

  • சென்னை: தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவரது செல்ஃபோனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Advertisement

    படப்பை அருகே மணிமங்கலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் தியாகு. 32 வயதான இவர் கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில், 20 வயதான கல்லுாரி மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார்.

    Advertisement

    நேற்று முன்தினம் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், அந்த மாணவி வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தியாகு, கழிப்பறை ஜன்னல் வழியே மாணவி குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

    இதை பார்த்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து, தியாகு உடனே அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தியாகுவை கைது செய்தனர்.

    தியாகுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவரது செல்ஃபோனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தியாகு தவெக நிர்வாகி எனக் கூறப்படுகிறது.

    English Summary

    Thiagu (32), a TVK functionary, has been arrested near Tambaram—for peeping at a college student while she was bathing. Arrested based on a complaint filed by the student, he has admitted to peeping through the window. Furthermore, the police have confiscated his mobile phone and are currently examining it.