மாநில உரிமைகள் பாதுகாப்பு திமுகவைவிட தவெக பெஸ்ட்.. வன்னி அரசு அதிரடி.. ஆடிப்போன டெல்லி

  • சென்னை: தமிழக அரசியல் சூழ்நிலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. தீவிர பாஜக எதிர்ப்பில் இருந்த திமுக, இப்போது தவெக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், ஐயுஎம்எல் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகயில் தவெக கூட்டணியில் இணைந்து திமுகவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் மாநில உரிமைகளை பாதுகாப்பதில் கடந்த திமுக அரசை விட, தவெக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்று வன்னி அரசு கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாமக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை முன்பே கூறிவிட்டோம். பாமகவும் சொல்லிவிட்டனர். பாமகவை வெறுக்கும் இயக்கம் விசிக இல்லை. கோட்பாட்டின் அடிப்படையில் கருத்து கூறினோம். பாமகவை எப்போதும் நேசிக்கிற கட்சி நாங்கள். சமூகத்தின் அடிப்படையில் பாஜக, பாமக மீது வெறுப்பு இல்லை.

    Advertisement

    திமுகவைவிட தவெக பெஸ்ட்

    சனாதன, சாதிய அரசியலை தூக்கி பிடிப்பதை மட்டுமே எதிர்க்கிறோம். ராமதாஸ், அன்புமணி, சௌமியா மீது தனிப்பட்ட ரீதியாக எங்களுக்கு எந்த காழ்ப்பு, வெறுப்பு இல்லை. அவர்கள் எங்கள் மீது வெறுப்பை கொட்டுகிறார்களே தவிர, நாங்கள் எல்லாரும் அரவணைக்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியை பாஜக செய்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் அதை முடித்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

    இதை திமுக நன்கு அறிவார்கள். பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தான். இப்போது ஏன் போராடவில்லை என தெரியவில்லை. இதற்காக அவர்கள் பாஜக ஆதரவு என சொல்லவில்லை. அவர்கள் போராடுவது ஜனநாயகத்துக்கும், தமிழ் மண்ணிற்கும் நல்லது. மாநில உரிமைகளை பாதுகாப்பதில் கடந்த திமுக அரசை விட, தவெக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது. தவெக ஆட்சி சரியாக நடப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    Advertisement

    மாநிலத்திற்கு தனிக்கொடி

    மாநில உரிமையை பொறுத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறியுள்ளார். மாநிலத்திற்காக தனிக் கொடி என்பது தவறான கருத்து கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு சட்டப்படி நடக்கிறது. இந்த முடிவில் பழிவாங்கும் நோக்கம் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்" என்றார்.

    English Summary

    VCK leader Vanni Arasu says the TVK government is performing better than the previous DMK government in protecting Tamil Nadu's state rights and criticizes opposition parties for targeting the ruling party.