இப்படி வந்து மாட்டிக்கிட்ட விஜய்.. தவெக அரசுக்கு நெருக்கடி! பவர் துறையில் வெடிக்கும் பிரச்சனை

  • சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கெனவே மின்வெட்டு பிரச்சனையில் தவெக அரசு மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த வேலை நிறுத்தம் மின் விநியோகத்தை மேலும் பாதித்திருக்கிறது. இதனால் அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி அமைந்திருக்கிறது. புதிய கட்சி ஆட்சி அமைத்தவுடன் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் மின்வெட்டு பிரச்சனை ஆட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது.

    Advertisement

    முந்தைய ஆட்சி காலங்களிலும் மின்வெட்டு இருக்கும். திமுக ஆட்சியில், கலைஞர் கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கொடூரமான மின் வெட்டு இருந்தது. இருப்பினும், சென்னையில் மின்வெட்டு பெரிய அளவில் இருக்காது. அதிகபட்சமாக 20 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு இருக்கும். ஆனால், தவெக ஆட்சியில் சென்னையில் 6 மணி நேரம் வரை கூட மின்வெட்டு ஏற்பட்டிருந்தது. இது மக்களை ரொம்பவும் டென்ஷன் ஆக்கியது.

    மின் வெட்டு பிரச்சனையால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். எதிர்க்கட்சிகளும் இந்த பிரச்சனையை வைத்து தவெக அரசை கார்னர் செய்தன.

    Advertisement

    விஷயம் பெரியதாவதை உணர்ந்த தமிழக அரசு, மின்வாரியத்துறை என்ன நிலைமையில் இருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மொத்தம் 65,921 பேர் தேவைப்படுவதாக கூறியிருந்தார். இதற்கான ஆட்கள் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். இங்குதான் பிரச்சனையே வெடித்திருந்தது.

    அதாவது, மேட்டூர் அனல் மின் நிலையம் உட்பட, பல்வேறு இடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஊழியர்களின் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த போராட்டம் தற்காலிகமானதுதான் என்பதால், பெரிய பிரச்சனை இல்லை.

    Advertisement

    இருப்பினும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நிச்சயம் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். இது தவெக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க துறை ரீதியில் அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தனர். இப்படி இருக்கையில், இந்த போராட்டம் விஜய்யை அதிருப்தியடைய செய்திருக்கிறது.

    English Summary

    TVK Government: Contract workers of the Electricity Board across Tamil Nadu have gone on strike to press for various demands. This strike has further disrupted power supply at a time when criticism against the TVK government regarding power outages is already mounting, creating a fresh crisis for the government.