சிட்டிங் அமைச்சர்களுக்கு தூக்கமே போச்சு? அவங்க கிளம்பிட்டாங்க போல! இப்ப தானே தவெக ஆட்சி ஆரம்பிச்சது?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இப்போது பெரும் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கக் காலத்திலிருந்தே கட்சிக்காக வியர்வை சிந்தி உழைத்த மாவட்டச் செயலாளர்கள், இப்போது புது பிரச்சனை ஒன்றை கிளப்பி உள்ளார்களாம்.. தலைமைக்கு கடுமையான நெருக்கடியையும் தந்து வருகிறார்களாம்... இந்த தகவல் வெளியாகி, அமைச்சர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில் தவெக தரப்பில் 30 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

    Advertisement

    கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.


    தவெகவில் உட்கட்சி பூசல்

    இப்போது கட்சிக்குள் ஒரு அதிருப்தி வெடித்துள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் ஆரம்பம் முதல் உழைத்தவர்களுக்குத்தான் கட்சியில் முக்கியத்துவம் தரப்படும் என்றுதான் தவெக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 60 சதவீதப் பதவிகள் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தன. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ், ராஜ்மோகன் என வெளியில் இருந்து வந்தவர்களுக்கே உயர் பதவிகள் வழங்கப்பட்டன.

    அதையும் தாண்டி, சட்டசபைத் தேர்தலில் கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத 106 பேருக்கு சீட் கொடுக்கப்பட்டது சீனியர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்..

    Advertisement

    சீனியர்கள் அதிருப்தி

    தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்த பிறகும், தஞ்சாவூர் சரவணன், ஈ.சி.ஆர். சரவணமூர்த்தி, மதுரை கல்லாணை, தங்கபாண்டி, காஞ்சிபுரம் முனிரத்தினம், சைதாப்பேட்டை அருள்பிரகாசம் போன்ற சீனியர் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

    அதற்கு பதில் கட்சிக்குப் புதியவர்களான கீர்த்தனா, குமார், ரஞ்சித்குமார், ஸ்ரீநாத், ராஜிவ், லோகேஷ் தமிழ்செல்வன், கமலி ஆகிய 7 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது ஒட்டுமொத்த சீனியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.. இதுகுறித்து அப்போதே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மூத்த நிர்வாகிகள் தங்களின் குமுறல்களை கொட்டியும் உள்ளனர்.. ஆனாலும் இந்த குமுறல் இப்போது அதிகமாகி கொண்டே வருவதாக தெரிகிறது.

    Advertisement

    தவெக சிட்டிங் அமைச்சர்கள்

    காரணம், பென்னாகரம் கஜேந்திரன், ஊத்தங்கரை இளையராஜா, திருப்பத்தூர் திருப்பதி, வேலூர் வினோத் கண்ணன், நிலக்கோட்டை அய்யனார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதேசமயம் அமைச்சர்களாக இருக்கும் ராஜிவ், ரஞ்சித்குமார் ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவியைக் கேட்டுத் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதனிடையே, மாற்றுத் திறனாய்வாக வெளியில் இருந்து வந்தவர்களுக்காகக் கட்சியின் மாவட்டங்களை உடைத்து, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமிக்கத் தலைமை திட்டமிட்டுள்ளது.

    விஜய் என்ன முடிவெடுப்பார்

    இதனால் இன்னும் கொதிப்படைந்த சீனியர்கள், "ஏற்கனவே எங்களை வஞ்சித்துவிட்டீர்கள், இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியையும் பிடுங்க பார்க்கிறீர்களா? நாங்கள் என்ன தவறு செய்தோம்? விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்று சொல்கிறீர்களே, அப்போதாவது எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பீர்களா" என்று ஆவேசமாக கேட்க துவங்கியிருக்கிறார்களாம்.

    Advertisement

    இவர்களுக்கு ஆதரவாக மக்கள் இயக்க நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளதால், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் யாரை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறாராம்.. இதனால் தங்களின் அமைச்சர் நாற்காலி எப்போது பறிபோகுமோ என்ற பயத்தில் இப்போதுள்ள சிட்டிங் அமைச்சர்களும் தவித்து வருகிறார்களாம்..

    தவெக ஆட்சி மீது ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வீசி வரும் நிலையில், தவெகவுக்குள்ளேயே இப்படியொரு அதிகாரப் போட்டி ஆரம்பமாகி உள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

    English Summary

    TVK Government Has Just Started... Why Are Sitting Ministers Already Feeling the Pressure?