தவெக அரசு சோபா மாடல் அரசுதான்.. SOFA-வுக்கு அமைச்சர் வன்னி அரசு கொடுத்த விளக்கம்!

  • சென்னை: தவெக தலைவர்கள் அதிமுக அதிருப்தியாளர்களை சந்திக்க போகும் போதும் சரி, திருமாவளவனை சந்திக்க போகும் போதும் சரி.. புஷ்பா திரைப்பட பாணியில், சோபா முன்னாடி சென்றது என்றும், தவெக அரசு சோபா மாடல் அரசு என்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் விசிக அமைச்சர் வன்னி அரசு இது குறித்து கொடுத்துள்ள விளக்கம் கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வந்த நிலையில், கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கூட்டணிக்காக விசிக, ஐயுஎம்எல் மற்றும் இடதுசாரிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.

    Advertisement

    ஆதரவு கேட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க, விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும், கூட்டணி தலைவர்களை சந்திக்க தவெக தலைவர் போவதற்கு முன்னர், அவர்களின் அலுவலகத்திற்கு புஷ்பா திரைப்பட பாணியில் சோபா சென்றிருந்தது. இதை குறிப்பிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசை சோபா மாடல் அரசு என்று விமர்சித்து வருகின்றனர்.

    இப்படி இருக்கையில் தனியார் செய்தி ஊடக நேர்க்காணலில் பங்கேற்றிருந்த அமைச்சர் வன்னி அரசு, "தவெக அரசு சோபா மாடல் அரசுதான், S-Social Justice, O-Organised Action, F-Freedom, A-Anti Corruption & Caste இதுதான் SOFAவுக்கு விளக்கம்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    மேலும், "முதலமைச்சர் விஜய், விமர்சனங்களுக்கு பதில் சொல்வதை விட தனது செயலில் அந்த பதிலை காட்டுகிறார். கடந்த திமுக அரசின் நிலைப்பாடுகள் தவெக அரசிலும் தொடர்கின்றன. திமுக மற்றும் தவெக ஆட்சிக்கு இடையே கொள்கை அளவில் பெரிய வித்தியாசம் இல்லை" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

    மேலும் தொடர்ந்து பேசிய அவர், "முதல்வராக கிடைத்த வாய்ப்பை மறுத்தவர் திருமாவளவன். தவெக அரசு தொடர திருமாவளவன் முக்கிய காரணம். இந்த அரசு தொடர்கிறது என்றால் அதற்கு எங்கள் தலைவர் எடுத்த முடிவு தான் காரணம். அவர் அந்த முடிவெடுக்கவில்லை என்றால் தற்போது சூழல் வேறுமாறியாக இருந்திருக்கும். திருமாவளவன் தான் கிங் மேக்கர்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    TVK Government Is a 'Sofa Model': Even when Thaveka leaders were going to meet AIADMK dissidents, or even when they were going to meet Thirumavalavan.. In the style of the movie Pushpa, there were criticisms that Sofa went ahead and Thaveka's government was a sofa model government. In this case, the explanation given by Minister of Special Affairs Vanni Arasu in this regard has received attention.