விவசாய நிலங்களை இனி 'வீட்டு மனை' ஆக்குவது மிக கடினம்.. ரியல் எஸ்டேட்டில் தமிழக அரசு புதிய ரூல்ஸ்

  • சென்னை: விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்காக மாற்றுவது மீதான கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு கடுமையாக்கியுள்ளது; இதனால் விவசாய நிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மேலும் கடினமாக்கப்பட்டுள்ளது. , 500 மீட்டர் சுற்றளவிலான நிலப்பரப்பியல் விவரங்கள், வடிகால் திட்டம், சிட்டா மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கான அடங்கல் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றுவதையே அரசுதடை செய்யவில்லை. அதேநேரம் இந்த விஷயத்தில் கடுமையான நடைமுறைகளை அரசாணையில் அறிவித்துள்ளது. அதன்படி திட்டமிடப்படாத பகுதிகளில் ஈரநிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு கட்டாயமாக்கி உள்ளது. குறிப்பாக, 500 மீட்டர் சுற்றளவிலான நிலப்பரப்பியல் விவரங்கள், வடிகால் திட்டம், சிட்டா, மூன்று பசலி ஆண்டுகளுக்கான (ஜூலை முதல் ஜூன் வரை) அடங்கல் இணைக்கப்பட வேண்டும். மேலும், வருவாய், வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    Advertisement


    இந்த அரசாணை ஏன்

    ஈரநிலங்களில் விவசாயம் அல்லாத மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறுவதற்கான ஆவணச் சரிபார்ப்புகளையும் துறைசார் தடையின்மைச் சான்றிதழ்களையும் அரசு அதிகரித்து உள்ளதற்கு காரணம் ஈர நிலங்களை பாதுகாப்பதற்கு தான். அதேநேரம் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா விவசாய நிலங்களுக்கும் இது பொருந்தாது. 2017 விதிகள் திட்டமிடப்படாத பகுதிகளுக்கு மட்டும் தான் பொருந்தும். வருவாய்ப் பதிவுகளில் ஈரநிலமாக வகைப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மட்டும் தான் இந்த அரசாணை பொருந்தும்.

    முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
    Advertisement

    ஈர நிலங்களை விவசாயம் அல்லாத வணிக பயன்பாட்டிற்கு மாற்ற அல்லது வீடு கட்டுவதற்கு இனி வருவாய் கோட்டாட்சியர், இணை வேளாண்மை இயக்குநர், நீர்வளத் துறை செயற்பொறியாளர் ஆகிய மூன்று அதிகாரிகளிடமிருந்தும் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். நிலப்பரப்பியல் வரைபடம், வடிகால் திட்டம், தள வரைபடம் போன்றவற்றை காட்ட வேண்டியதிருக்கும். அதேபோல் இனிமேல் ஈரநிலங்களை வாங்கி வீட்டு மனைகளை உருவாக்குவது மிககடினம் ஆகும். அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் முதலீடு செய்வதும் குறைந்துவிடும்.

    அதேநேரம் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். 500 மீட்டர் சுற்றளவில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், வடிகால் அமைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்பதால், இனி நீர்நிலைகளை ஓட்டியுள்ள நிலங்களை பிளாட் போடுவது கடினம் ஆக்கும். அந்த நிலங்கள் பாதுகாக்கப்படும். நீர் வழிப்பாதைகளும் பாதுகாக்கப்படும்.

    Advertisement
    வெறும் 30 யூனிட்டுக்கு 141 ரூபாயா? விஜய் சார் இதுதான் உங்கள் மாற்றமா.. ஈரோடு இளைஞருக்கு 'இபி' பதில்

    (1) விதி 2-இல், உட்பிரிவு (ii) நீக்கப்படுகிறது.

    (2) விதி 3-இல்,

    (அ) உட்பிரிவு (1)-இல், "ஆன்லைன் இணையதளம்" (online portal) என்ற சொற்களுக்குப் பதிலாக, "ஆன்லைன் ஒற்றைச் சாளர இணையதளம்" (online Single Window Portal) என்ற சொற்கள் மாற்றீடு செய்யப்படுகின்றன.

    (ஆ) உட்பிரிவு (2)-க்குப் பிறகு, பின்வரும் புதிய உட்பிரிவு சேர்க்கப்படுகிறது:

    "(3) ஈரநிலங்களில் விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்காக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்போது, விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போதே பின்வரும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்:

    Advertisement

    (அ) விற்பனைப் பத்திரம் அல்லது குத்தகைப் பத்திரம் அல்லது அதிகாரப் பத்திரத்தின் சுயசான்றொப்பமிட்ட நகல்;

    (ஆ) பட்டாவின் சுயசான்றொப்பமிட்ட நகல்;

    (இ) நிலத்தின் வடிகால் அமைப்புத் திட்ட வரைபடம் (Site Drainage Plan);

    (ஈ) உரிய அளவுகோலில் (1:400 / 1:800 / 1:1600) தயாரிக்கப்பட்ட நிலவரைபடம் (Site Plan);

    (உ) முன்மொழியப்பட்ட மனைப்பிரிவு வரைபடம், உட்பிரிவு வரைபடம் அல்லது கட்டட வரைபடம் (பொருந்தும் நிலையில்);

    (ஊ) கிராம வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள அனைத்து தற்போதைய மேம்பாடுகளையும் காட்டும் நிலப்பரப்பியல் வரைபடம் (Topographical Plan). இந்த வரைபடம் 1:2000 என்ற அளவுகோலுக்குக் குறையாத அளவில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்;

    Advertisement

    (எ) விண்ணப்பதாரருக்குச் சொந்தமில்லாத புறம்போக்கு நிலம், அரசு நிலம் அல்லது வேறு எந்த நிலமும் விண்ணப்பத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆன்லைன் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit);

    (ஏ) சம்பந்தப்பட்ட ஈரநிலத்துக்கான சிட்டாவின் சுயசான்றொப்பமிட்ட நகல்;

    (ஐ) நடப்பு பசலி ஆண்டு உட்பட, அதற்கு முந்தைய மூன்று பசலி ஆண்டுகளுக்கான அடங்கலின் சுயசான்றொப்பமிட்ட நகல்."

    (3) விதி 4-இல், பிரிவு (அ)-க்குப் பதிலாகப் பின்வருவது மாற்றீடு செய்யப்படுகிறது:

    "(அ) ஈரநிலங்களைப் பொறுத்தவரை, ஆன்லைன் ஒற்றைச் சாளர இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, இயக்குநர் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் (Revenue Divisional Officer), இணை வேளாண்மை இயக்குநர் (Joint Director of Agriculture) மற்றும் நீர்வளத் துறையின் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் (Executive Engineer) ஆகியோரிடமிருந்து தடையின்மைச் சான்றிதழைப் (No Objection Certificate) பெற வேண்டும்."

    (4) விதி 6 நீக்கப்படுகிறது" இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Government tightened restrictions on the conversion of agricultural lands for non-agricultural use, making it increasingly difficult to carry out construction activities on farmland