சென்னை: தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் இப்போதே ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் கணக்குகளை கச்சிதமாக வகுக்க ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. குறிப்பாக, சட்டசபை பலத்தை அதிகரிப்பது ஒருபுறம் என்றால், எதிர்க்கட்சிகளின் அரசியல் தாக்குதல்களை எதிர்கொள்வது மறுபுறம் என டபுள் முனை வியூகத்துடன் தவெக ஜரூராக களமிறங்க தயாராகி வருகிறது.
இப்போதைய சூழலில் தவெகவிடம் 107 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அப்படியானால் மெஜாரிட்டிக்கு 118 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது... நடைபெற போகும் இடைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், தவெகவின் பலம் கணிசமாக 114 ஆக உயரும். அந்தவகையில், தனிப்பெரும்பான்மையை எட்ட இன்னும் 4 இடங்களே குறைவாக உள்ளன..
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு, தவெக அரசு தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் ஆட்சியை தொடர்வதில் பெரிய சிக்கல் இருக்காது என்பதே அரசியல் கணக்கு. இதனால் இந்த இடைத்தேர்தல் வெறும் தொகுதி வெற்றி என்ற அளவில் பார்க்கப்படவில்லை... மாறாக, சட்டசபையில் தனது பலத்தை நிரூபிப்பதற்கான முக்கியமான அரசியல் சான்ஸாகவே தவெக . இதனைப் பார்க்கிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே இடைத்தேர்தலில் 7 தொகுதிகளையும் கைப்பற்றுவது, அரசுக்கு மக்கள் மத்தியிலுள்ள ஆதரவை நிரூபிக்கும் முக்கியமான அரசியல் செய்தியாக மாறும். இந்த பின்னணியில்தான் முதல்வர் ஜோசப் விஜய்யின் சமீபத்திய சட்டசபை பேச்சும் கவனம் பெற்றுள்ளது. நிதித்துறை ஆய்வு தொடர்பான 3 முக்கிய துறை விவரங்கள் ஆதாரங்களுடன் தன்னுடைய மேஜையில் இருப்பதாகவும், எதை எப்போது வெளிப்படுத்த வேண்டுமோ அந்த நேரத்தில் சரியாக வெளிப்படுத்தப்படும் என்றும் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், இடைத்தேர்தல் நேரத்தில் விஜய் இப்படி பேசியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. "டேபிள் மீதுள்ள அந்த 3 ஃபைலை எப்போது திறந்து பார்ப்பீர்கள்" என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விடாமல் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்ட நிலையில், இதுகுறித்து சில தகவல்கள் அரசல் புரசலாக இணையத்தில் கசிந்து கொண்டிருக்கிறது.. அதாவது, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும்போதுதான், முதலமைச்சரின் மேஜையில் உள்ள ஊழல் பைல்களில் உள்ள விவரங்கள் வெளிவரும் என்கிறார்கள்.. அந்த நேரத்தில் ஃபைல் விவரங்கள் வரும்போது, மக்கள் மத்தியில் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று தவெக கணக்கு போடுகிறதாம்.. மேலும், இதன் மூலம் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களின் மத்தியில் ஆளுங்கட்சியின் செல்வாக்கை பன்மடங்கு உயர்த்தவும் ஸ்கெட்ச் போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி ஃபைல் ஆவணங்களை விஜய் வெளிக்கொண்டுவந்தால், அவற்றின் உண்மைத் தன்மை, ஆதாரம், சட்டரீதியான நிலை போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் நிச்சயம் கேள்வி கேட்கவே செய்யும்... அதுமட்டுமல்லஇ,"உங்கள் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது" என்று ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பதால், அந்த கோப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவற்றை ஆதாரங்களுடன் விளக்குவதும் விஜய் அரசுக்கு சவாலாக மாறும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!தவெக போட்ட மாஸ்டர் பிளான்
3 ஃபைல்கள் - உருட்டல், மிரட்டல்
உதயநிதி ஸ்டாலின்