சென்னை: தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பாகம் (TN Fact Check) அமைப்பின் தலைவராக இருந்த ஐயன் கார்த்திகேயன், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ராஜினாமா செய்தார். இந்நிலையில், தற்போது இந்த அமைப்பின் பெயர் மாற்றப்பட்டு, அதன் தலைவராக தவெக ஐடி விங் நிர்வாகியான 'குரு' நியமிக்கப்பட்டிருக்கிறார்.
போலி செய்திகள், உண்மையை விட வேகமாக மக்கள் மத்தியில் ரீச் ஆகிறது. இதை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட அமைப்புதான் TN Fact Check.
திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவதூறுகள் எழுந்த போது, உண்மையை மக்கள் மத்தியில் இந்த அமைப்பு கொண்டு சென்றது. குறிப்பாக திமுக மதச்சார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது.. அது இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை என்று இந்துத்துவா அமைப்புகள் சோஷியல் மீடியாக்களில் கம்பு சுற்றி வந்தன. இப்படியான நரேட்டிவ்களை அடித்து நொறுக்கியது TN Fact Check அமைப்புதான். ஆனாலும், திமுக ஆட்சியில் போதுமான வேகத்தில்.. காத்திரமாக செயல்பட்டிருக்க வேண்டிய அமைப்பு, பத்தோடு பதினொன்றாக நின்றுவிட்டது என்று விமர்சனங்களும் எழுந்தன. இப்படி இருக்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, TN Fact Check அமைப்பின் நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். எனவே இப்போது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்படி தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் (TN Fact Check) அமைப்பின் பெயர், 'தகவல் நேர்மை மையம்' (IID) என மாற்றப்பட்டிருக்கிறது. 'ஆன்லைன் தளபதி ஃபேன்ஸ் கிளப்' நிறுவனர் மற்றும் தவெகவின் ஐடி விங் தலைவருமான 'குரு தலைவா' என்பவர் IID அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரசன்னா என்பவர் இதற்கு அடுத்த பொறுப்பிலும், சுஜிதா என்பவர் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல தவெக ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் திவ்யா, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் சமூக ஊடக மையத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அமைப்பு வழக்கம் போல உண்மை சரிபார்ப்பு பணிகளை செய்யும். அதேபோல உண்மை சரிபார்ப்பு செய்ய கோரும் புகார்கள் அல்லது கோரிக்கைகளுக்கு தனி டிக்கெட் ஐடி கொடுத்து, அது தொடர்பான பணிகள் வெளிப்படை தன்மையுடன் கண்காணிக்கப்படும். உண்மை சரிபார்ப்பு கோரிக்கைகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. 1. உயர் முன்னுரிமை இதில் உயர் முன்னுரிமை கொண்ட உண்மை சரிபார்ப்பு கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் கிடைக்கும். நடுத்தர முன்னுரிமை மற்றும் குறைந்த முன்னுரிமை கொண்ட கோரிக்கைகளுக்கு முறையே 3 மற்றும் 7 மணி நேரத்தில் பதில்கள் கிடைக்கும். பொய் செய்திகள் வேலை நேரத்தில் மட்டுமே பரவுவது கிடையாது என்பதால், வேலை நேரத்தை தாண்டியும் அலுவலர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். என்ன இருந்தாலும் தவெக பேன்ஸ் கிளப் தலைவரை, உண்மை சரிபார்ப்பு அமைப்பின் தலைவராக நியமித்தது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.அமைப்பின் பணிகள்
புதிய நிர்வாகிகள்
பெயர் மாற்றம்
உண்மை சரிபார்ப்பு பணிகள்
2. நடுத்தர முன்னுரிமை
3. குறைந்த முன்னுரிமை