சென்னை: தவெக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து 3 மாதங்கள் முடிந்திருக்கும் நிலையில், தவெக கூட்டணிக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
கடந்த சில நாட்களாக இந்த குழப்பங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. தலைமை செயலாளருக்கு எதிராக தவெக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு பஞ்சாயத்து சீரியஸாக வெடித்திருக்கிறது.
தவெக ஆட்சிக்கு வர ஆதரவு கேட்டபோது.. நிபந்தனையற்ற சப்போர்ட் தந்து, விஜய்யை முதலமைச்சராக்கிய கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகளை குறி வைத்து 2 முக்கிய உத்தரவுகளை தவெக அரசு வெளியிட்டிருந்தது. முதல் அறிக்கையில், திண்டுக்கல் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை லிஸ்ட் எடுத்து அனுப்ப வட்டாட்சியர் கேட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தததால், வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது. அடுத்த நாளே.. இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு வெளியிட்டிருந்தது கல்லூரி கல்வி துறை. இந்த உதரவை கண்டித்தும், குஜிலியம்பாறை வட்டாட்சியரின் உத்தரவை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றன. தலைமை செயலாளர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அவருக்கு தெரியாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே விஜய் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதிகாரிகளா.. கம்யூனிஸ்ட் கட்சியா? என்பதை விஜய் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் காட்டமாக கூறிவிட்டன. இதனால் விஜய் கடும் அப்செட் ஆகியிருக்கிறார். இது போதாது என விசிக vs காங்கிரஸ் என் பிரச்சனை வெடித்திருக்கிறது. தவெக அமைச்சரவையில் விசிகவும், காங்கிரஸும் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர் குறித்து விசிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறது. உயர் கல்வித்துறை அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் இருக்கிறார். இந்த அமைச்சரின் நடவடிக்கைகள் அதிருப்தி ஏற்படுத்துகிறது என விசிக துணை பொதுச் செயலாளர் சா.ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மாணவிகளின் காலை பிடித்து சர்ச்சையில் சிக்கியது, ஊழல் புகார்கள், CPI, CPIM கட்சிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது என.. அமைச்சர் விஸ்வநாதனின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவையாக இருக்கின்றன என்று விசிக ரஜினிகாந்த் விமர்சித்திருக்கிறார். இது காங்கிரஸை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. எனவே கதர் தலைகளும் பதில் கொடுக்க தொடங்கியிருப்பதால்.. கூட்டணிக்குள் குழப்பம் அடுத்த ஸ்டேஜுக்கு சென்றிருக்கிறது. இது கூட பரவாயில்லை.. விசிகவுக்கும் இன்னொரு கட்சிக்கும்தான் பிரச்சனை என்று கடந்து போய்விடலாம். ஆனால், விசிகவுக்கும், விசிகவுக்குமே பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. தவெக பக்கம் திருமாவளவன் போனதிலிருந்து.. ஒரு முறை கூட கூட்டணியை ஆஹா ஒஹோ என விசிகவின் மாநில முதன்மை செயலாளரான ஆளூர் ஷநவாஸ் பேசியது கிடையாது. எதற்கெடுத்தாலும் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல விஜய் உடன் கூட்டணி வைத்ததை ஏற்க முடியாது என்று கூறி.. செய்யூர் தொகுதி முன்னாள் விசிக எம்எல்ஏ பனையூர் பாது தடாலடியாக திமுகவில் இணைந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது போதாது என.. இன்னும் விசிகவுக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த பஞ்சாயத்துகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பெரிய பஞ்சாயத்து தவெகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்தான் அடுத்த பிரதமர் என்று மேடைக்கு மேடை தவெக அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். விஜய்யை தேசிய அளவில் கொண்டு போக வேண்டும் என்றும்.. தமிழ்நாட்டிலிருந்து ஏன் பிரதமர் வரக்கூடாது என்றும் தவெகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதான் காங்கிரஸை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று நாங்கள் வேலை பார்த்து வருகிறோம்.. நீங்கள் விஜய்யை எப்படி முன்னிறுத்தலாம்? விஜய்தான் அடுத்த பிரதமர் என்கிற வாதங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இதனால் தவெக vs காங்கிரஸ் என்கிற மோதல் வெடித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து 3 மாதம்தான் முழுசா முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள ஏகப்பட்ட ஏழரைகளை கூட்டினால் எப்படி? என்று விஜய் அதிருப்தியடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.கம்யூனிஸ்ட்களும் தவெகவும்
தவெகவுக்கு சிக்கல்
விசிக vs காங்கிரஸ்
கூட்டணியில் குழப்பம்
விசிக vs விசிக
தவெக vs காங்கிரஸ்
சூடான காங்கிரஸ்