தவெகவுக்கு அடுத்தடுத்து சரிவு.. அடித்து ஆடிய திமுக! விஜய் நெனைச்சது நடக்கலையே!

  • சென்னை: நீதிமன்ற விஷயத்தில் தவெக நினைத்து முழுமையாக நடக்காததால் முதலமைச்சர் விஜய் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த விஷயத்தை தவெக கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

    Advertisement

    சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில், கரூர் தொடர்பான வழக்கில் தவெக வெற்றி பெற்றிருந்தது. இதே உற்சாகத்தோடு மற்ற வழக்குகளில் நுழைந்த தவெகவுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியிருந்தது.

    Advertisement

    அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு

    கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் முன்ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

    ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

    ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களில், அதாவது ஒன்றரை மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் தனது சொந்த காரில் காவல் நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படவில்லை. மாறாக காவல்துறையின் ஜீப்பில் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். 6 மணி நேர விசாரணைக்கு பின்னர், அவர் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    Advertisement

    இந்த வழக்கில் என்னதான் தவெக ஓவர் சீரியஸ் காட்டியிருந்தாலும், அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க முடியாமல் போனது தவெகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

    செந்தில் பாலாஜி வழக்கு

    அதேபோல செந்தில் பாலாஜி வழக்கிலும் தவெகவின் ஆசை நிறைவேறவில்லை. நாளை முதலமைச்சர் விஜய் கரூர் செல்கிறார். அதற்கு முன்னதாக செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் தவெகவின் பிளான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். ஆனால், தவெக எதிர்பார்த்த மாதிரி செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியவில்லை.

    வழக்கில் என்ன நடந்தது?

    தவெக அரசை கவிழ்க்க அக்கட்சி எம்எல்எவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, வழக்கு பதியப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யதவர்களுடன் லிங்கில் இருந்ததாக செந்தில் பாலாஜி பக்கம் வழக்கு திரும்பியது. அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு அடுக்கியது.

    Advertisement

    தவெக எம்எல்ஏவை தொடர்பு கொண்டு பேசிய போன் கால் விவரங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். கைதான குற்றவாளிகள் ஜூன் 25,26,27ம் தேதிகளில் கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து பேசியதற்கான ஆதாரம் இருப்பதாகவும், ரூ.35 கோடி பேரத்தில் ஹவாலா பணம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற டவுட் இருக்கிறது என்றும் கூறி செந்தில் பாலாஜி கைதுக்கு கோரியிருந்தார்.

    கோட்டை விட்ட தவெக

    ஆனால், தவெக எம்எல்ஏவை தொடர்பு கொண்டு என்ன பேசினார்கள்? என்பதற்கான ஆதாரம் தவெகவிடம் இல்லை. அதேபோல இந்த வழக்கின் FIR-ல் செந்தில் பாலாஜியின் பெயர் நேரடியாக இடம்பெறவில்லை. இதையெல்லாம் திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியிருந்தார்.

    Advertisement

    அப்செட்டில் விஜய்

    இப்படியாக இரண்டு முக்கியமான வழக்குகளிலும் நீதிமன்றம் வரை போய், தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் தவெக பின்னடைவை சந்தித்திருக்கிறது. என்னதான் உச்சநீதிமன்றத்தில் தற்காலிக வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற வழக்குகளில் தவெகவால் நினைத்ததை செய்ய முடியவில்லை என்பதால் விஜய் அப்செட்டில் இருக்கிறாராம்.

    English Summary

    TVK Government: Reports indicate that Chief Minister Vijay is upset because things regarding the court matter did not unfold entirely as TVK had anticipated. In particular, TVK had not expected Senthil Balaji to be granted bail at all.