சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை?

  • சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் வென்றது. தேர்தல் தோல்வி குறித்து ஆராயவில்லை என குற்றம்சாட்டிய சில எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாக பிரிந்தனர்.

    Advertisement

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேரும் வேலுமணி அணியில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வந்தனர். சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேலுமணி அணி ஆதரவு தெரிவித்திருந்தது.

    தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறடா உத்தரவை வேலுமணி தரப்பு மீறியது. இதனால் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது வேலுமணி தரப்புக்கு இடம் வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இதற்கு தவெகவுக்கு ஆதரவு கொடுத்த திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. இதனால் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதைத் தொடர்ந்து அந்த அணியில் இருந்த 4 எம்எல்ஏக்கள்- மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

    வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் சிலர் எடப்பாடி பழனியிடம் மீண்டும் சென்றுவிட்டனர். வேலுமணியும் எடப்பாடி பழனிசாமியிடம் சென்றுவிட்டார். ஆனால் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் செல்லவில்லை.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் விஜயபாஸ்கரோ, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் என கூறிவிட்டார்.

    Advertisement

    இந்த நிலையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்படும் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள், சண்முகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால் அவர் விரைவில் ராஜினாமா செய்துவிடுவார் என சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.

    தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி நடத்தலாம் என பேச்சுவார்த்தை எழுந்தது சிவி சண்முகத்திற்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எம்ஜிஆர் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான் என்கிற போது திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்து ஆட்சி செய்வது என்பதுதான் இவர்களது கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Tamilaga Vettri Kazhagam (TVK) is reportedly holding discussions to appoint former AIADMK minister C. V. Shanmugam as the Tamil Nadu government's Special Representative in Delhi. The development has sparked political speculation, with talks underway regarding his potential role in strengthening the state's representation and coordination with the central government.