திமுகவினரை கெட்ட வார்த்தையில் திட்டிய நாஞ்சில் சம்பத்.. சேரை தூக்கி முகத்தில் அடித்த திமுக தொண்டர்!

  • சென்னை: தனியார் சேனல் ஒன்று நடத்திய விவாதத்தில் பங்கேற்ற தவெக மூத்த நிர்வாகி நாஞ்சில் சம்பத், திமுகவினரை கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் அவர்களை அடிக்க பாய்ந்துள்ளனர். திமுக ஆதரவாளர் ஒருவர் வீசிய சேரும் நாஞ்சில் சம்பத் முகத்தில் பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    சென்னை முகப்பேரில் பிரபல தனியார் ஊடகம் சார்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த விவாதத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் திமுகவை மிக கடுமையாக விமர்சித்து பேசி வந்தார்.

    Advertisement

    ஒரு கட்டத்தில் அவர் திமுகவினரை மிக மோசமான கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த திமுகவினர் மற்றும் நாஞ்சில் சம்பத் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அரசியல் எதிர்ப்பு இருந்தாலும் எப்படி இவ்வளவு மோசமான வார்த்தையை பயன்படுத்தலாம் என திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரங்கில் திரண்டிருந்த திமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த ஒருவர் சேரை எடுத்து நாஞ்சில் சம்பத்தை நோக்கி வீசியுள்ளார். அந்த சேர் நாஞ்சில் சம்பத்தின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் சேர் பட்டதும் அவர் பதறி போனார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், விவாத நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அரங்கில் ஏற்பட்ட பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், திமுகவினரை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், நாஞ்சில் சம்பத் குறிப்பிட்ட கெட்ட வார்த்தையால் கொதிப்படைந்த திமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது விவாதத்தில் பங்கேற்ற திமுகவின் ராஜீவ் காந்தி அக்கட்சி தொண்டர்களைச் சமாதானப்படுத்தினார். அதன் பிறகே திமுகவினர் சர்று அமைதியானார்கள். நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

    English Summary

    TVK senior leader Nanjil Sampath reportedly faced an attack during a private TV channel debate: திமுகவினரை திட்டிய நாஞ்சில் சம்பத்