கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தவெக! சட்டென தமிழில் பேசிய சவுரவ் தாஸ்! ஆட்சியாளர்களுக்கு புது கலக்கம்

  • சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் ஆட்சியாளர்கள் வெளியில் வரவில்லை. அதற்குள் புதிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் காக்ரோச் ஜனதா (CJP) நிர்வாகி சவுரவ் தாஸ். இதனால் தமிழக ஆட்சியாளர்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    "டெல்லியில் அக்.10ம் தேதி, ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. எனவே தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். இந்த போராட்டம் தீவிரமாக இருந்தால்தான் ஞானேஷ் குமார் பதவி விலகுவார்" என்று தமிழில் அழைப்பு விடுத்திருக்கிறார் சவுரவ் தாஸ். இவரது அழைப்பை ஏற்று தமிழகத்திலும் போராட்டம் பரவுமோ என்று தவெக ஆட்சியாளர்கள் அச்சமடைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    தமிழகத்திற்கு பரவிய போராட்ட அலை

    கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி இதேபோல டெல்லி ஜந்தர் மந்தரில், முன்னாள் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக CJP பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தது. இவர்களது கோரிக்கை ரொம்பவும் சிம்பிள்! நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான். ஆனால், அரசு விடாப்பிடியாக நின்றது. மாணவர்களும் நின்றார்கள். டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்ட அலை பரவியது.

    தவெக அரசின் மோசமான அணுகுமுறை

    குறிப்பாக இந்திய மாணவர் சங்கம் (SFI), AISF, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட மாணவர், இளைஞர்கள் அமைப்புகள் இந்த போராட்டத்தை லீட் செய்தன. அனிதா மரணத்திற்கு எதிராக, நீட் தேர்வுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்த முதலமைச்சர் விஜய் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு! போராட்டக்காரர்களை போலீசார் தேடி தேடி கைது செய்தனர். தமிழ்நாடு முழுவதும் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு, விஜய் தலைமையிலான அரசு அனுமதி மறுத்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போலீஸ் SFI தலைவர்களை கைது செய்ய முயன்றது.

    Advertisement

    கண் சிவந்த கூட்டணி கட்சிகள்

    ஒரு கட்டத்தில் டென்ஷனான கம்யூனிஸ்ட் கட்சிகள், போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கறாராக பேசின. அதன் பின்னர்தான் தவெக அரசு வேறு வழியின்றி அனுமதி வழங்கியது. ஆனால், இந்த போராட்டம் தவெக அரசுக்கு மிகப்பெரிய பாடம். இனி இப்படியான எந்த போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்துவிடவே கூடாது என்று முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.

    தவெகவுக்கு புதிய அச்சம்

    இப்படி இருக்கையில் சவுரவ் தாஸ் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழக ஆட்சியாளர்களிடம் புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே SIR நடவடிக்கை மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராக முதலமைச்சர் விஜய் பெரியதாக பேசவில்லை என்று விமர்சனங்கள் இருக்கின்றன. மட்டுமல்லாது நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக கூட சாஃட் டோனில்தான் தவெக அறிக்கை விட்டிருந்தது. பாஜக என்கிற பெயரே இல்லாமல் அறிக்கை இருந்ததால் தவெக அரசு பாஜக ஆதரவாக செயல்படுகிறது என்று விமர்சனங்கள் வெடித்தன.

    Advertisement

    இப்படி இருக்கையில், சவுரவ் தாஸ் வேண்டுகோளை ஏற்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினால் நிலைமை மோசமாகிவிடும். குறிப்பாக தவெக அரசு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக காட்டமான அறிக்கையை விட வேண்டி வரும் என்று அரசு அஞ்சுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனவேதான் சவுரவ் தாஸின் அழைப்பு தவெகவுக்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK Leaders Rattled: The authorities in Tamil Nadu have not yet recovered from the shock of the student protests against the NEET exam. Amidst this, Saurav Das, an office-bearer of 'Cockroach Janata' (CJP), has dropped a bombshell. It is reported that the state's ruling establishment is deeply displeased by this development.