திமுக ஆட்சியில் மின் உற்பத்தி செய்யாததே.. இப்போது மின் வெட்டு ஏற்பட காரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

  • சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மின்வெட்டு என்பது தொடர் பிரச்சினையாக மாறியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 5 ஆண்டுகளாக திமுக மின் உற்பத்தி செய்யாததே இப்போது மின்வெட்டிற்கு காரணம் என சாடியுள்ளார்.

    Advertisement

    சென்னை விமான நிலையத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது லண்டன் பயணத்தில் ஏன் தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்து செல்லவில்லை என்பது குறித்து விளக்கமளித்தார். மேலும், தமிழகத்தில் மின்சார பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில், அது குறித்தும் சில கருத்துகளை கூறினார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனா

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "விளையாட்டுத்துறை அமைச்சராகவும், தமிழ்நாட்டில் ஒலிம்பிக் சிட்டி திட்டத்தை கொண்டுவரும் நோக்கிலும் நடிகர் அஜித்குமாரின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். நமது ஊரில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அங்கு ஆய்வு செய்தோம்.

    லண்டன் பயணம்

    தொழில் துறை அமைச்சர் எங்களோடு வராதது குறித்து பலரும் கேட்கிறார்கள். அவருக்கு கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லை. அதை வெளியே சொல்ல முடியாது. அந்த 4 நாட்களுக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதை முதலமைச்சரிடமும் என்னிடமும் பதிவு செய்திருந்தார். அந்த நேரத்தில் அவர் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருந்தது. மேலும், தொழில் துறை செயலாளருக்கு வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி இருந்ததால் வர முடியவில்லை.

    Advertisement

    ஆனால், முதலமைச்சரின் அதிகாரி, இண்டஸ்ட்ரி செக்ரட்டரிகள், மெம்பர் செக்ரட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிகாரிகளும் எங்களுடன் வந்திருந்தனர். எனவே, எதிர்க்கட்சியினர் கேட்டும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது. தொழில்துறை அமைச்சர் எங்கள் சகோதரி தான். அவர் வராமல் போனதால் என்ன இருக்கு!

    பொய் பிரச்சாரம்

    அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மிக பெரிய ஆளுமைகள் இருந்த போதும் சரி, இப்போது எங்கள் தலைவர் விஜய் வந்த பிறகும் சரி, திமுக ஒரு போலி பிரச்சாரத்தை உருவாக்கி நெகட்டிவ்வான விஷயங்களை பரப்புவார்கள். இதுதான் திமுகவின் கலை. இது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதற்கு பதில் கொடுக்கவும் எனக்கு தெரியும். திமுகவை இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தோற்கடித்து வீட்டில் உட்கார வைப்பதுதான் அதற்கான பதில்.

    Advertisement

    மின்சார சிக்கல்

    இன்று மின்சார பிரச்சனை ஏன் வருகிறது? கடந்த ஐந்து ஆண்டுக்கால திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்திக்கான எந்தவொரு கட்டமைப்பு திட்டத்தையும் அவர்கள் உருவாக்கவில்லை. புதிய மின் திட்டம் எதையும் அவர்கள் உருவாக்கவில்லை.. இன்று மழை கம்மியானதால் நீர்மின் உற்பத்தி குறைந்துவிட்டது; காற்றாலை மின்சாரமும் குறைந்து, வெளியில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளாக இந்த சிக்கல் இல்லாமல் இருந்தது. ஆனால், அவர்கள் மின் உற்பத்திக்கு எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்காமல் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை கொண்டு வந்தோம் திமுகவால் சொல்ல முடியுமா? அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டினோம் என சொல்ல முடியுமா? முடியாது.. ஏனென்றால் அவர்கள் எதுவும் செய்யவில்லை.

    Advertisement

    திமுக தான் காரணம்

    இதுதான் பிரச்சினை. திமுக தான் காரணம் என சொல்லி நாங்கள் பழியை மட்டும் போடவில்லை. காரணத்தை மக்களிடம் விளக்கிவிட்டு, பிரச்சினையை சரி செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்கிறோம்.

    ஒரு வாடகை வீட்டுக்குள் போகும்போது, அந்த வீடு இடிந்து போயிருந்தால் 'வீடு இடிந்திருக்கிறது, இதை சரி செய்ய வேண்டும்' என்று சொல்லிவிட்டுத்தான் உள்ளே போக முடியும். அதுபோல திமுகவினர் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் இடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை நாங்கள் இடித்து துடைத்துவிட்டு, புதிதாகக் கட்டி எழுப்பி வருகிறோம். இந்த நிர்வாகச் சிக்கல்களைச் சரிசெய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும். எல்லாவற்றையும் முதலமைச்சர் விஜய் சரிசெய்து ஒரு நல்லாட்சியை வழங்குவார்" என்றார்.

    English Summary

    Tamil Nadu Minister Aadhav Arjuna blamed the previous DMK government for the recent power cuts(தமிழகத்தில் அதிகரிக்கும் மின்வெட்டு குறித்து ஆதவ் அர்ஜுனா): Aadhav Arjuna about raising power cut in tamil nadu.