தவெக அமைச்சர் அருண்ராஜ் 1 கண்டிஷனை போட்டதுமே டாப்பில் நகர்ந்த விஜய் அரசு! இளங்கோவனுக்கு ஒரே பாராட்டு

  • சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், அமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று மானாமதுரை தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.. மக்கள் பிரதிநிதியின் இந்த எளிய மற்றும் பொறுப்பான செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுகுறித்து எம்எல்ஏ இளங்கோவன் பேட்டி தந்துள்ளார். என்ன சொல்லி உள்ளார் தெரியுமா?

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அக்கட்சியின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    தவெக எம்எல்ஏ இளங்கோவன்

    அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் சொந்த மற்றும் தங்களது உறவினர்களின் உடல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அண்மையில் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியிருந்தார்.

    அமைச்சரின் இந்த அட்வைஸைத் தொடர்ந்து, அதனை தன்னுடைய சொந்தக் குடும்பத்திலேயே முன்னுதாரணமாகச் செயல்படுத்திக் காட்டியுள்ளார் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவான இளங்கோவன். திருப்புவனம் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவரான சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவனுக்கும், அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் தேவமித்ரா என்ற மகள் உள்ளார்.

    Advertisement

    அரசு பள்ளியில் மகளை சேர்த்த எம்எல்ஏ

    தேவமித்ரா இதற்கு முன்பு தனது சொந்த ஊரான அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இப்போது புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், இளங்கோவன் தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்த்துள்ளார்.

    சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பும், மக்கள் பிரதிநிதியாக பொறுப்பேற்ற பின்பும் தனது மகளின் கல்வியை எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் அரசுப் பள்ளியிலேயே தொடரச் செய்துள்ள அவரது இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

    Advertisement

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரின் சபாஷ்

    இதுகுறித்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, நானும் ஒரு அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன் என்பதால், என்னுடைய மகளும் அரசுப் பள்ளியிலேயே கல்வி பயில வேண்டும் என்று நினைக்கிறேன்.. இது என்னுடைய நீண்ட நாள் ஆசை ஆகும்.. அந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    திருப்புவனத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குத் தனது மனைவியுடன் நேரில் சென்று, மகளை 6ம் வகுப்பில் சேர்த்துள்ளார் எம்எல்ஏ இளங்கோவன்..

    எம்எல்ஏவாக கடமையாற்றிய இளங்கோவன்

    அத்துடன் நின்றுவிடாமல் அந்தப் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்தும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும் அந்தப் பள்ளியின் தேவைகளைத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும் எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகளே தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவது, அரசு கல்வி நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.. அதுமட்டுமல்ல, மாற்று அரசியலை முன்னிறுத்திச் செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தச் செயல், பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது..!!

    Topics: #Arunraj

    English Summary

    Arunraj’s 1 strict Condition Sparks immediate Action! Vijay Government Moves to the Next Stage as MLA Ilangovan Earns Widespread Praise