சென்னை: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கைக்கான ஆணைகளை அமைச்சர் அருண் காமராஜ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளி" என்ற சொல்லிற்குப் பதிலாக "உடல் ஊனமுற்றோர்" என்ற வார்த்தையை பயன்படுத்தியது சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பல் மருத்துவ இடங்களுக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வானது நடைபெற்று வருகிறது. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 4,949 இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் அருண் காமராஜ் தொடங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூ ரார் அரசு பள்ளோக்கு மருத்துவமனை வளாகத்தில், முதல் நாளான இன்று முன்னாள் ராணுவத்தினர் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடந்தது. அப்போது மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகள்" என்ற வார்த்தைக்கு பதிலாக "உடல் ஊனமுற்றோர்" என பேசினார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியின் போதே ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்குப் பதிலாகக் கண்ணியமிக்க மாற்றுத்திறனாளி என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசால் அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்படி இருக்கும் போது, அரசு விழாவின் போதே அமைச்சர் ஒருவரே பழைய சொல்லை பயன்படுத்தியது சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் அருண் காமராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம். இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத்திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது.. வழக்கத்திலிருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம். மாற்றுத் திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம்.மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தைக்கு பதிலாக
வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.