மதுரை: எடப்பாடி சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள திமுகவிடம் ஐக்கியமாகி விட்டார் எனவும், சும்மா ரெய்டு நடக்கவில்லை, 1000 கோடி 2,000 கோடி கொள்ளையடித்துள்ளனர். அதனால் தான் ரெய்டு நடக்கிறது எனவும், கடந்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை சுற்றி சுற்றி கொள்ளை மட்டுமே அடித்து வந்தனர் என மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாற்று கட்சியினர் 1000 பேர் தவெகவில் இணையும் விழா மின்துறை அமைச்சர் மதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.டி.நிர்மல்குமார்," தமிழகம் முழுவதும் அலை அலையாய் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இணைகிறார்கள். அரசியல் எதிர்காலம் உள்ள கட்சி தவெக தான். மற்ற கட்சி காரர்கள் எல்லாம் மணல் குவாரி, கல்குவாரி எடுத்து வருமானம் ஈட்டும் மாதிரி இருந்திருப்பார்கள். ஆனால், தவெக அப்படி இல்லை.
மக்களோடு பயணித்து, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ள கட்சி தவெக ஒட்டுமொத்த மக்களின் அன்பை பெற்றது தவெகதான். திமுக கொள்கை இல்லாத கட்சி. திமுக மாவட்ட செயலாளர்களை யாராவது பார்த்ததுண்டா. மதுரையில் அமைச்சர் மூர்த்தி இருந்தார். அவரது பெயர் மட்டும் தான் தெரியும் .மத்தபடி எந்த நல்லதும் செய்யவில்லை. திமுகவினரோ அதிமுகவினரோ ஆட்சியிலிருந்த போது பொது மக்கள் யாரும் பார்க்க முடியுமா ? முடியாது. திமுகவின் உதயநிதியையோ பார்க்க முடியாது. இந்த நிலைமை தான் தமிழகம் முழுவதும் இருந்தது. ஆனால் மக்களாகிய நீங்கள் விரும்பியதால் தான் நாங்கள் இன்று அமைச்சர்களாக உள்ளோம். எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட கொண்டு வாங்க முடியாதுனு சொல்ல மாட்டேன். மதுரையில பாதாள சாக்கடை வசதி இல்லனு சொன்னாங்க அந்த வசதி ஏற்படுத்தி தர 2400 கோடி தர அமல்படுத்தியுள்ளார். ஒரு வருடத்தில் பணிகள் முடியும். கடந்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. சுற்றி சுற்றி கொள்ளை மட்டுமே அடித்து வந்தனர். மக்களுக்கு நல்லது செய்ய வந்த ஒரே நிரந்திர முதல்வர் விஜய் மட்டும் தான். உதயநிதி மதியம் 3 மணிக்கு தான் எழுந்திருக்க செய்கிறார். அவர் துணை முதல்வராக இருந்த போதும் அப்படிதான். சென்னையில் மழை வெள்ளம் இருந்த போதும் உதயநிதி தூங்கி கொண்டு தான் இருந்தார். இப்போது அவருக்கு ஒரு வேலையும் இல்லை. நல்லா படுத்து தூங்குகிறார். யார பாக்கிறதுனு தெரியாம ஒரு கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டு உள்ளது. சேலத்தில மாவட்ட செயலாளர் மட்டுமே இன்னும் மாவட்ட செயலாளர் மட்டுமே. அவரது எம்.எல்.ஏ.க்கள் யாரை பார்க்க வேண்டுமென தெரியவில்லை. எடப்பாடி தனது சொத்தை பாதுகாக்க தற்போது திமுகவிடம் ஐக்கியம் ஆகி விட்டார். அதிமுக , திமுக என எந்த கட்சியிராக இருந்தலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென வந்தால் ஏற்றுக் கொள்வோம்,. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருக்கும் அனைவரும் வர தயாராக இருக்காங்க. அனைவரையும் வரவேற்று வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். ஆயிரம் கோடி, 2 ஆயிரம் கோடி ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிருங்காங்க. அதான் ரெய்டு போயிட்டு இருக்கு. மாற்று கட்சியிலிருந்து தவெகவில் இணையும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறினார்.சிடிஆர் நிர்மல்குமார்
உதயநிதி
முதல்வர் விஜய்
எடப்பாடி பழனிசாமி
தவெக