“எனது ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டுகின்றனர்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” - அமைச்சர் ஜெகதீஸ்வரி

  • சென்னை: "எனது ஆபாச வீடியோ இருப்பதாகச் சொல்லி, சிலர் என்னைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தேவையானால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்." என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி அளித்துள்ளார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாகப் பணியாற்றியவர். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் தனது பெயர் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் அமைச்சர் கீர்த்தனாவின் பெயருக்கு பின்னால் தனது பெயர் போடப்பட்டதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அதைத்தொடர்ந்து, தவெக நிர்வாகி ஒருவரை கொன்றுவிடுவேன் என அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக ஒன்றிய செயலாளரிடம் மற்றொரு தவெக நிர்வாகியை பற்றி பேசிய ஜெகதீஸ்வரி, "அவனை தூக்கி வைத்து, ஜட்டியோட வைத்து அடிச்சே கொன்னுடுவேன், என்னை பார்த்தா பைத்தியக்காரி போல் இருக்கா? என் தொகுதிக்குள் சாத்தூர்க்காரன் ஒருத்தன் காலை வைக்க விட மாட்டேன்" எனப் பேசிய ஆடியோ வைரலானது.

    Advertisement

    மேலும், ஜெகதீஸ்வரி, வேட்பு மனு தாக்கலின்போது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்ட பட்டப்படிப்பு, வருமான ஆதாரம் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் பிஎஸ்சி ஜர்னலிசம் படித்ததாக குறிப்பிட்டுள்ளதை, அப்படி ஒரு படிப்பே தமிழ்நாட்டில் இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசியுள்ள ஜெகதீஸ்வரி, "எனது ஆபாச வீடியோ இருப்பதாகச் சொல்லி, சிலர் என்னைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தேவையானால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்." எனக் கூறியுள்ளார். து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    "Some individuals have contacted me, claiming to possess an obscene video of mine and demanding money through threats. If necessary, I will take legal action against them," TVK Minister Jagadeeswari said in an interview.