“எங்களை பொருட்டாகவே மதிக்காவிட்டால் SOP கொண்டு வந்தது ஏன்?” ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

  • சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு, தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். "எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றால், SOP ஏன் கொண்டு வந்தீர்கள்?" என ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக குறித்தும் அதன் தலைமை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். " நமது கொள்கை எதிரிகளுடன் மோதியதால், இந்த கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்." எனப் பேசினார் ஸ்டாலின்.

    Advertisement

    "5 நிமிடங்கள் பேசினால் அகிலமே ஆடிப்போய்விடும் என்று பேசிக்கொண்டிருந்தார். இன்று ஒரு தொகுதியில் வாக்கு வாங்குவதற்கே குட்டிக்கரணம் அடிக்கிறார். வாழ்க்கை ஒரு வட்டம்தான். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, இப்போது முதல்-அமைச்சருக்கு நன்றாக பொருந்துகிறது" என விமர்சித்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

    ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்கு, தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதில் கொடுத்துள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தோல்வித் தலைவர்" ஸ்டாலின் அவர்களே... எங்களைப் பார்த்து "கோமாளிகள்" என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்.. பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?

    Advertisement

    தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்? யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்? மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்? ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?

    வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்? மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உ.பிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?

    எங்களை "கோமாளிக் கூட்டம்" என்று சொல்லும் "தோல்வித் தலைவர்" அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்... "அந்த கரடி பொம்மை என்ன விலை?" "சார், அது கண்ணாடி சார்!". எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    TVK Minister Rajmohan has responded to the criticisms made by DMK leader Stalin.